சிந்தித்து செயற்படுவோம்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

சிந்தித்து செயற்படுவோம்!

(எம்.எஸ்.எம்.பாயிஸ்-சவுதி)

ஒரே பொழுதில்,தாய் நாட்டில், பிறந்த ஊரில், சொந்த மண்ணில்,
அகதிகளாக்கப்பட்டுள்ளோம்!
உயிர்களை இழந்தோம், சொத்துக்களை இழந்தோம், உடமைகளை இழந்தோம், நிம்மதியை
இழந்தோம்... இனி இழப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?
சொந்த நாட்டில் ஒரு இனத்துக்கு தங்களின் மத கலாச்சாரத்துடன் அமைதியாக வாழ
இடமில்லை என்றால்...? இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கிறது..?


இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை பொலிசாரினால் நிலைநிறுத்த முடியாதவாறு ஒரு
குழு அதிகாரத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு அராஜகம் புரிவதை இந்த
அரசாங்கம் அனுமதிக்கிறதா? நாங்களும் ஆயுதங்களை கையில் எடுத்து
இவர்களுக்கு எதிராக தற்காப்பு போர் செய்ய இந்த அரசாங்கம் அனுமதிக்குமா?

ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிட முடியாத கையாலாகாத தனத்தில்தான் இன்று
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களின் நிலை இருக்கிறது. இனி அவகாசமில்லைஇ முஸ்லிம் சமூகம்
கண்திறக்க வேண்டும்! நமது பிரதிநிதிகளுக்கு எதிரான போராட்டத்தை நாம்
உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் கொடுக்கும் முட்டில்தான் இந்த
அரசாங்கம் ஒரு சமூகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ளது. சில நாடாளுமன்ற
உறுப்பினர்களின் சொகுசு வாழ்க்கைக்காக மொத்த முஸ்லிம் சமூகத்தையும்
அடகுவைக்க இடமளிக்க முடியாது! எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்கள்
இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். நமக்கு இருக்கும்
வாக்குரிமையை நாம் முறையாக கையாள வேண்டும். வாக்கு எனும் அமானிதத்தை
சரியானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். சோரம் போகும் அரசியல்வாதிகளுக்கு
முடிவுகட்ட வேண்டும்.

நேற்று மாவனல்லஇ இன்று தர்கா நகர்இ அளுத்கமஇ பேருவல... நாளை நமது
ஊர்களும் இலக்கு வைக்கப்படலாம். அதற்கான திட்டங்களும் தயார் நிலையில்தான்
இருக்கிறது. நாம் ஒற்றுமைப்படவேண்டும். அந்தந்த பிரதேச மக்கள் தங்களின்
பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய சரியான நெஞ்சுறுதிமிக்க தலைவர்களை
இனம்கண்டு எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க வேண்டும். முறையான
திட்டமிடலின்றி முன்னெடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது.

அரசாங்கம் இந்தக் குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்இ
முஸ்லிம்களின் இருப்பிடங்களுக்கும் மத வழிபாட்டுத்தலங்களுக்கான
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்இ பாதிக்கப்பட்ட மக்களுக்கான
நிவாரணங்களும் இழப்பீடுகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்இ இனிமேல்
இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post Top Ad