இலங்கையில் பணத்தை அறிமுகம் செய்தது முஸ்லிம்கள்தான் ! பஷீர் சேகுதாவூத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

இலங்கையில் பணத்தை அறிமுகம் செய்தது முஸ்லிம்கள்தான் ! பஷீர் சேகுதாவூத்

'பண்டமாற்று பொருளாதாரம் நடந்த காலத்தில் இலங்கை மக்களுக்கு பணம் என்றால் என்ன என்பதை அறிமுகப் படுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான். இன்று கடை வீதிகளில் விற்கப்படும் கொத்து ரொட்டி, பராட்டா, வட்டலாப்பம், பிரியாணி இவைகள் வரை அனைத்தையும் முஸ்லிம்கள்தான் அறிமுகம் செய்தார்கள்'  என உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.


'இன்றைய  முஸ்லிம்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள் என்று சில பேரினவாதிகள் கேற்கின்றனர். போக்குவரத்து பற்றி தெரியாத இலங்கை மக்களுக்கு கடல் வழிப் பிரயாணம்   முதல் அத்தனை போக்குவரத்து முறைகளையும் சொல்லிக் கொடுத்தவர்கள் முஸ்லிம்ககள்ளாகும்' எனவும் அவர் தெரிவித்தார். 

கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் (வை.எம்.எம்.ஏ) 64 ஆவது மா நாட்டில் விசேட பிரதி நிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இலங்கை முன்னேற முடியாது இருப்பதற்குக் காரணம் இலங்கை ஒரு    இறக்குமதி நாடாக இருப்பதாகும். நாம் ஏற்றுமதி நாடாக மாறினால் வளம் கொழிக்கும். ஆனால் இலங்கையிலிருந்து ஏலம், கருவா உட்பட அனைத்துப் பண்டங்களையும் ஏற்றி இறக்கியவர்கள் முஸ்லிம்கள்.

பெரும்பான்மை மக்களது ஆதரவு 

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பெரும்பான்மை மக்களது ஆதரவை பெற்றால் மட்டுமே தீர்வை காணமுடியும்.
முப்பது வருட யுத்தம் முடிவடைந்து நாடு அமைதியை பேனும் சந்தர்ப்பத்தில் மற்றுமொரு இனவாத வன்முறையை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

பௌத்த மக்களுல் மிகச் சிறிய குழுவாக இருக்கும் பொது பல சேனாவும், ராவணா பலயவும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களை தூண்ட முயற்சித்த போதும் பெரும்பான்மை சிங்கள மக்கள் இவ்வாறான வன்முறைகளை எதிர்க்கின்றனர். 

அவர்களது உதவியை பெற்றுக் கொள்ளாமல் ஒருபோதும் இதில் வெற்றி பெற முடியாது. முப்பது வருடம் தமிழ் மக்கள் போராடினர். நானும் ஈரோஸில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டேன். 

இருந்தாலும் எனது அனுபவத்தில் கூறுகின்றேன் தமிழ் மக்களது போராட்டம் முப்பது வருடத்திற்கு பிறகும் தோல்வியடைந்ததற்கு காரணம் பெரும்பான்மை   மக்களது ஆதரவை பெறாததே ஆகும்.

சிங்களவர்களுடன் இணங்கித்தான் செயலாற்ற வேண்டும்

இன்று முஸ்லிம்களுக்குத் தேவைப்படுவது உணர்ச்சிபூர்வமாகத் தொழிற்படும் தலைமைத்துவமல்ல. சிந்தனை பூர்வமாகத் தொழிற்படும் தலைமைத்துவமே ஆகும். கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப் போராடினர். ஆனால் இதுவரை அது வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.

நாம் சிங்களவர்களுடன் இணங்கித்தான் செயலாற்ற வேண்டும். முஸ்லிம்களின் 1100 வருட வரலாற்றை எடுத்துப்பாருங்கள். ஒல்லாந்தர்களால் விரட்டப்பட்டனர். அப்போது செனரத் மன்னன் புகழிடம் அளித்தான். அன்று செனரத் மன்னன் இல்லாவிடில் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் இருந்திருக்க மாட்டார்கள். 

அதேபோல் 1915 காலப்பகுதியில் ஏற்பட்டு  கலவரத்தின்போது பிரித்தானிய அரசு முஸ்லிம்களுக்கு  உதவியது.  காரணம் முஸ்லிம்கள் அன்று பிரித்தானிய அரசுக்கு விசுவாசம் காட்டினர். இதன் பிரதி பலனே அதுவாகும்.

இன்று முஸலிம்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மூன்றாகும். இதன் அடிப்படையிலேதான் சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்படுகிறது. 

முஸ்லிம்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள்

இதற்கு எதிராக நாம் சிந்தனை ரீதியான பதில்களை வழங்குவதன் மூலமே அதனை முறியடிக்க முடியும்.

பேரினவாதிகள் முன்வைக்கும் மூன்று குற்றச்சாட்டுக்கள் இவைதான். ஒன்று முஸ்லிம்கள் அதிக சனத்தொகையைப் பெருக்குகின்றனர். இரண்டாவது, முஸ்லிம்கள் தனவந்தர்கள் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முஸ்லிம்களிடம் ஜிஹாத்படை உண்டு என்பதே.

1880ஆம் ஆண்டு மேற்கொண்ட குடிசன மதிப்பீட்டின்படி  ஏழு சதவீத முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்தனர்.  2014ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விபரத்தில் அதனை விட ஒரு சதவீதம் கூடியுள்ளது. 

இது எப்படிக் கூடியது என்றால் தமிழ் சமூகம் பெருமளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் விகிதாசாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு  அது மொத்த எண்ணிக்கையில் முஸ்லிம்களில் ஒரு சதவீதத்தால் உயர்வைக் காட்டுகிறது. எனவே எமது சனத் தொகை அதிகரிக்கவில்லை.

அதேபோல் இலங்கை முஸலிம்களில் 65 சதவீதமானவர்கள் குறை வருமானம்    கொண்டவர்கள். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு டொலர் கூட வருமானம் இல்லாதவர்கள். (சுமார் 260 ரூபா) இதுதான் உண்மை. எனவே நாம் செல்வந்தர் என்பது கற்பனைக் கதையாகும்.

எம்மிடம் எந்தப்படையும் கிடையாது

மூன்றாவது எம்மிடம் எந்தப்படையும் கிடையாது. எம்மிடம் எந்த ஆயுதமும் கிடையாது. இதனை நாம் மிகத்தெளிவாகக் கூறவேண்டும். இதனை புலனாய்வுப் படையினரும் நன்கு அறிவார்கள். வெளிநாடுகள் இங்கு ஜிஹாத் இருப்பதாக கூறி ஊடுறவுப் பார்க்கிறது' என்றார்.

No comments:

Post Top Ad