முஸ்லிகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஓர் கண்டனப் பிரேரணை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

முஸ்லிகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஓர் கண்டனப் பிரேரணை


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

17-06-2014  செவ்வாய்க்கிழமை  கிழக்கு மாகாண சபையில் முஸ்லிகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஓர் கண்டனப் பிரேரணை நிறைவேற்றுதலின் ஊடாக அரசிற்கு அழுத்தத்தினை கொடுப்பது சம்மந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால்; ஓர்  பிரேரணை திட்டமிட்டபடி முன்வைக்கபட்டு இருந்தது.


ஏற்கனவே  சபையினுடைய நிகழ்ச்சி நிரலிலும் உள்வாங்கப்பட்டிருந்;தது.

ஆனால் இன்று இதே பிரச்சினையை அவசரப் பிரேரணையாக முன் மொழிந்து ஆரம்ப உரையை ஆற்றவேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுகொண்டதன் விளைவாகவும் அதனை அவ்வாறு முதன்மை படுத்தி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்க முடியாது என்ற சர்ச்சை எழுந்ததன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தவிசாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டாலும் தொடர்ச்சியாக சபையினை கொண்டு செல்வதற்க்கு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததனாலும் இன்றைய சபை கூட்டம் எதிர்வரும் ஜூலை 16 ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

எது எவ்வறாயினும் எமது சமூகத்தின்  பிரச்சனையினை முன்னிறுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக இந்த சபையை ஒத்திவைக்க காரணமாக இருந்தவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெறுமனே ஓர் சபை கூட்டத்தை ஒத்திவைப்பதற்கு உதவியதே தவிர இந்த சமூகத்தின் பிரச்சினை இன்று பேசப்படவில்லை.

இதற்கு பிறகு தாழ்த்தி  பேசிவதனால் அது இன்று அரசுக்கு  கொடுக்க இருந்த அந்த உணர்வுரீதியான அழுத்தம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு பொது நோக்கிற்காக எங்களுடைய எல்லா சுயலாபங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ஒன்று பட்டு செயற்படவேண்டும் என்ற பாடம் இன்று புகட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் எங்களுடைய கருத்துகளையும் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களையும் உரியமுறையில் கட்டாயம் வெளிபடுத்த வேண்டும். கிடைக்கின்ற இவ்வாறான அரிய சந்தர்பங்களை கை நழுவ விட்டு விட்டு பின் கைசேதப்படுகின்ற ஓர் அரசியல் சமூகமாக இந்த சமூகம் இருப்பதை எண்ணி வெட்க்கப்படுகின்றேன்.

எந்தவொரு சந்தர்பத்திலும் இந்த சமூகத்திகற்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை வன்முறையற்ற வழிமுறையின் ஊடாக நாங்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்.

இந்த சமூகத்தின் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் எங்கள் சமூகத்தின் நன்மை மாத்திரம் கருதி ஒன்றுபட்டு உழைக்காதவர்களை இந்த சமூகத்தின் சார்பில் எச்சரிக்க வேண்டும்.

ஆனால் சமூக ஒற்றுமைக்காகவும் சமூக நலனுக்காகவும் நாங்கள் அல்லாஹ்வின் பெயரால் பொறுமை காக்கவேண்டும்.

இந்த போராட்டம் எந்தவொரு தருணத்திலும் சமூகத்தை பிளவு படுத்துகின்ற ஒன்றாக மாறிவிடாமல் எல்லோரையும் அரவணைத்து ஒன்றுபட்டு பாடுபடுவோம்.

யார் யாருக்கு எந்த மட்டத்தில் இந்த சமூகத்தை பாதுகாக்க பங்களிப்பு செய்ய முயுமோ அவரவர் உச்சகட்டதிற்கு பங்களிப்பு செய்வோம்.

ஆனால் சமூக ஒற்றுமைக்காகவும் சமூக நலனுக்காகவும் நாங்கள் அல்லாஹ்வின் பெயரால் பொறுமை காக்கவேண்டும். இந்த பௌத்த தீவீரவாதம் என்பது வெறுமனே 2012 இல்  தோற்றம் பெற்றது  அல்ல.
மாறாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இந்த தீவிர அமைப்பு 1886 இல் இருந்தே தோற்றம் பெற்றது.
இன்றுவரைக்கும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றபட்டு கொண்டிருக்கிறது.

எங்களுக்கு எதிராக ஏற்பட்டு கொண்டிருக்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்புகள் பௌத புத்தரின் கோட்பாட்டுக்குள் வெளியே நின்று 1900 ஆண்டுகளில் முஸ்லிம்களுடன் காழ்புணர்ச்சி கொண்டு இனத்துவேசத்தை கக்கிய அநாகரிக தர்மபாலவினுடைய கோட்டபாட்டுக்கு அமைய பின்பற்றியே இந்த அநீதிகளை செய்கின்றார்கள் .

இந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்பது பௌத்த குருமாருக்கு எதிராகவும் பௌத்த மதத்திற்கு எதிரானதும் அல்ல! அது முழுக்க முழுக்க தீவிரவாததிற்கு எதிரானது அன்றி வேறு ஏதும் இல்லை ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் உடனடியாக இந்த தீவிரவாத அமைப்புக்களை தடை செய்து இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்.

No comments:

Post Top Ad