புல்மோட்டைப் பிரதேசத்தில் ஹர்தால் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

புல்மோட்டைப் பிரதேசத்தில் ஹர்தால் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)அளுத்கம தர்கா நகர் முஸ்லிம்கள் மீது பொது பல சேனா அமைப்பினால் நடாத்தப்;பட்ட காடைத்தனமான வன்முறைகளை கண்டித்து இன்று நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் முஸ்லிம்களால் ஹர்தால் அனுஷ்;டிக்கப்படுகறது. அதன் ஒரு அங்கமாக புல்மோட்டைப் பிரதேச மக்களும் தமது கவலை உணர்வுகளை வெளிப்படுத்த தவறவில்லை அதன் பிரதி விம்பமாக  சகல கடைகளும் அடைக்கப்பட்டு  பொது மக்களும் அத்தியவசியத்தேவைகளின்றி வீதியில் நடமாடுவதையும் தவிர்த்துள்ளனர்.


மேலும் இப்பிரதேசத்தில் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு இவ்வாறான துக்க அனுஷ்டானத்திற்கு படைத்தரப்பினர் ஒத்துழைப்பு வழங்குவதென்பது அணைத்து பௌத்தர்களும் வன்முறைகளை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post Top Ad