இனமுறன்பாட்டு செயற்பாடுகள் நடைபெறாது இருக்க மக்களை தெளிவூட்ட வியூகம் அமைத்து செயற்படுவோம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

இனமுறன்பாட்டு செயற்பாடுகள் நடைபெறாது இருக்க மக்களை தெளிவூட்ட வியூகம் அமைத்து செயற்படுவோம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ் நிலை காரணமாக பேருவளைää தர்கா நகர்ää பதுள்ளை போன்ற பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள பெருந்தேசிய வாதத்தை சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக மூதூர் பிரதேச சபை உறுப்பினரும் ääகல்வி மற்றும் கலாசார மண்றத்தின் பனிப்பாளருமான அஷ்ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி  நேற்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.


மூதூர் பிரதேச மக்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு அகதிகளாக கந்தளாய்ற்கு வந்த போது எமக்கு உணவுகளை சமைத்து தந்த பேருவலை சமூகத்தை நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

அன்மைக்காலமாக இலங்கையிலே முஸ்லிம்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பேருவளை ää தர்கா நகர் என்று தொடர்ந்து செல்கின்றது இதனை பார்கின்ற போது பர்மாவின் நிலையைப் போன்று தொன்றுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷää பாதுகாப்பு அமைச்சர் போன்றோர் நாட்டிலே இல்லாத சந்தர்ப்பங்களில் பொது பல சேனாää சிங்கள ராவய போன்ற மத வாத இயக்கங்கள் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக்கொண்டு ஒற்றுமையாகவும்ää சந்தோஷமாகவும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் இனக் கலவரங்களை தோற்று விக்க முயற்சிப்பதானது அரச பங்காளிக் கட்சி என்ற வகையில் நாம் வண்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நாட்டிலே முஸ்லிகள் எந்தவொரு பௌத்த மதஸ்தலத்தையம் தாக்கியதாக வரலாறு கிடையாது. ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டும் புனித வேத மறை நூல் “அல்-குர்ஆன்” என்பன எறிக்கப்பட்டுமுள்ளது.

பொருளாதாரம்ää மனித உயிர்கள்ää மதஸ்தலங்களை போன்றவற்றை இலக்கு வைத்து செய்யப்படுகின்ற அனைத்து இன முரன்பாட்டு அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பூரண ஒத்துலைப்பு வழங்க வோண்டும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

முஸ்லிம் அரசியல் கட்சி தலைமைகளைப் பொருத்த வரையில் ஓரணியில் நின்று எமது உம்மாவிற்கு சுய நிர்ணயத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என்பது எனது கருத்தாகும்.

ஏதிர் வரும் வெள்ளிக்கிழமை நாட்டின் அனைத்து பள்ளி வாயல்களிலும்  குத்பா போருரையை இன நல்லுறவுää சகிப்புத்தன்மைää ஒற்றுமை போன்ற தலைப்புகளில் பேசுவதற்கு ஜம்இயத்துல் உலமாவிற்கு ஆலோசணைகளை  கூறியிருக்கின்றோம்.

அன்மையில் நடைபெற்ற அசாதாரண சு10ழ்நிலைகளால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டää உயிரிழப்புக்களை சம்பவித்த குடும்பங்களுக்கு மூதூர் மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புக்குரிய சகோதரர்களே! எமது தொழுகைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும்ää நாட்டின் சுபீட்ஷத்திற்கும் அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுமாறு இச்சந்தர்ப்பத்தில் மிகப் பனிவாக கோட்டுக்கொள்கிறேன்.

 

No comments:

Post Top Ad