பொதுபல சேனா இனவாத அமைப்பு இல்லையாம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

பொதுபல சேனா இனவாத அமைப்பு இல்லையாம்

(vi)

பொது­பலசேனா இன­வாத அமைப்பு அல்ல. புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் செயற்­பட வேண்­டிய தேவையும் எமக்­கில்லை. முஸ்­லிம்­களை ஒரு­போதும் எதி­ரி­க­ளாக நாம் நினைக்­க­வில்லை என்று பொது­பலசேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
 
புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் பொது­பல சேனா பௌத்த அமைப்பு செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
 
நாம் இன­வாத அமைப்­பென்று பலர் சுட்டிக் காட்­டு­கின்­றனர். சிறு­பான்மை மக்­களை அடக்­கவோ, முஸ்­லிம்­களை அழிக்­கவோ நாம் ஒரு­போதும் முயற்­சிக்­க­வில்லை. எமது நோக்கம் பௌத்த மதத்தை காப்­பாற்ற வேண்டும் என்­ப­தே­யாகும். அதற்­கா­கவே போராடிக் கொண்­டி­ருக்­கிறோம். அதேபோல் எம்மை அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் எனவும் அர­சாங்­கத்தின் அடி­யாட்­க­ளெ­னவும் தற்­போது நாம் புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் செயற்­ப­டு­வ­தா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்­து­வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்­ள­மாட்டோம். யாரு­டைய தய­வு­டனும் செயற்­பட வேண்­டு­மென்ற தேவை எமக்கு இல்லை. தவ­றான கருத்­து­களைப் பரப்பி எமது கொள்­கை­யி­னையும் பொது­பல சேனா பௌத்த அமைப்­பி­னையும் கொச்­சைப்­ப­டுத்த வேண்டாம்.
 
ஒரு­போதும் நாம் முஸ்லிம் இனத்­திற்கு எதி­ராக ஆயுதம் ஏந்­தி­ய­தில்லை. முஸ்­லிம்கள் செய்யும் மிகப் பெரிய தவ­று­களை சுட்டிக் காட்­டி­யுள்ளோம். நாட்­டிற்கு எதி­ராக அவர்கள் செயற்­ப­டும்­போது எதிர்த்­துள்ளோம். இவை அனைத்தும் குறித்த ஒரு சில முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எதி­ரா­னதே தவிர அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரா­ன­தல்ல. அளுத்­கம சம்­ப­வத்தில் நாம் அமை­தி­யாக செயற்­பட்டும் முஸ்­லிம்­களே வன்­மு­றை­யினை கையாண்­டனர். இதற்கு சிங்­கள மக்கள் விரும்­பாத நிலையில் அப்­ப­குதி கல­வர பூமி­யாக மாறி­யது.
 
இதில் எம்­மீது குற்றம் சுமத்தி முழுக் குற்­றத்­திற்கும் எம்மை பொறுப்­பாக்கி விடக்­கூ­டாது. நாம் முஸ்லிம் சமூ­கத்தை வெறுக்­க­வில்லை. அவர்­களும் இந்­நாட்டின் மக்­களே.
 
அவர்­களை தண்­டிக்க ஒரு போதும் நாம் விரும்­ப­வில்லை. எனினும், மத்­திய கிழக்கின் முஸ்லிம் மத­வாத தீவி­ர­வா­தி­களின் ஊடு­ருவல் தற்­போது இலங்­கைக்குள் பர­வி­விட்­டது.
அதன் விளை­வா­கவே இவ்­வா­றான இன முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றது.
 
முஸ்­லிம்கள் தமது உரி­மை­களை அனு­ப­வித்து வாழ்­வதை நாம் தடுக்­க­வில்லை. எனினும், சட்ட விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வதை எப்­போ­துமே நாம் அனு­ம­திக்கப் போவ­தில்லை. ஊட­கங்கள் எம்­மீ­தான தவ­றான பார்­வையில் செயற்­ப­டு­மாயின் அது மக்கள் மத்­தியில் எம்மை தவ­றா­ன­தொரு அமைப்­பாக மாற்­றி­விடும். குறிப்­பாக முஸ்லிம் ஊட­கங்கள் எமது செயற்­பா­டு­களை தவ­றா­கவே சித்­த­ரிக்­கின்­றது. இது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் எம்மை மோசமானவர்களாக கொண்டு சென்றுவிட்டது. எனவே, அதையும் ஊடகங்களே சரி செய்ய வேண்டும். இல்லையேல் நாம் நல்லதைச் செய்தால் அதை மக்கள் தவறாகவே எடுத்துக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
 

No comments:

Post Top Ad