வெளிநாடுகளின் சூழ்ச்சிகள்தான் அளுத்கம , பேருவளை சம்பவங்களுக்கு காரணம் ! அதாவுல்லா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

வெளிநாடுகளின் சூழ்ச்சிகள்தான் அளுத்கம , பேருவளை சம்பவங்களுக்கு காரணம் ! அதாவுல்லா

வெளிநாடுகளில் சூழ்ச்சிகளே அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுக்கு காரணம் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது இந்த சூழ்ச்சியின் நோக்கம் எனவும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தி, சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்துவது வெளிநாட்டு சூழ்ச்சிகளின் தந்திரமாகும்.
அத்துடன் இலங்கைக்கு இனவாத பிரச்சினைகள் உள்ளதாக காட்டி, இந்த பிரச்சினையை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கொண்டு செல்வதே அந்த தந்திரத்தின் நோக்கம்.
இதற்கு முன்னர், நாட்டில் இப்படியான மோதல்கள் இருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் சிங்கள மன்னர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து செயற்பட்டவர்கள் எனவும் அமைச்சர் அதாவுல்லா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad