வட்டரக்க விஜித தேரர் தாக்குதலுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டனம். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

வட்டரக்க விஜித தேரர் தாக்குதலுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டனம்.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய பலசேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் தாக்கட்டமைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பௌத்த நெறிகளின் அடிப்படையிலும்ää இந்த நாட்டின் சட்டத்திற்கு அமைவாகவும் மத ரீதியான தேசிய இணக்கப்பாட்டிற்காக உறுதியாகக் குரல் கொடுத்து வந்த பௌத்த மத குருக்களில் முக்கியமான ஒருவரான வட்டரக்க விஜித ஹேரத் அவர்கள்ää நேற்று கடத்தப்பட்டுää மேசமாகத் தாக்கப்பட்டுää சுயநினைவு இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவமானதுää இன வன்முறைகளினால் கவலையடைந்துள்ள சமாதானத்தை நேசிக்கும் அனைவரையும் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமையளிக்கப்படும் இந்நாட்டில்ää பௌத்த தர்மங்களை மீறி இனவாத வன்முறைகளை வெளிப்படையாகப் பரப்பித் திரியும் குழுக்களுக்கும்ää நபர்களுக்கும் எதிராக வந்தவிதமான ஆக்கபூர்வமான சட்ட நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் உண்மையான பௌத்த அறநெறிகளையும்ää மனிதாபிமானத்தையும்ää தேசிய ஐக்கியம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்றவற்றையும் வெளிப்படையாகப் போதித்து வரும் பௌத்த மத போதகர்களில் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டிருப்பதானதுää மனிதாபிமானமுள்ள எவராலும் அங்கீகரிக்கப்பட முடியாததாகும். இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த நாட்டில் உண்மையான முறையிலும்ää அமைதி வழியிலும் பௌத்த அறநெறிகளைப் போதித்து வரும் அனைத்து பௌத்த துறவிகளுக்கும்ää ஏனைய மத போதகர்களுக்கும் இந்தத் தாக்குதலானது பெரும் மனக்கிலேசத்தையும்ää அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் எவ்வாறான குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்ற விடயம் சகலரும் அறிந்த ஒன்றாக இருக்கும் நிலையில்ää இத்தருணத்திலாவது புத்த சாசன அமைச்சும்ää காவல்துறையினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இனவாதிகளின் நடவடிக்கைகளை முறியடித்து நம் நாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லுறவின் அடிப்படையில் நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad