கோத்தபாயவின் தீர்மானத்துக்கு முஸ்லிம் பேரவை வரவேற்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 30, 2014

கோத்தபாயவின் தீர்மானத்துக்கு முஸ்லிம் பேரவை வரவேற்பு

சமூக இணையத்தளங்களைப் பயன்படுத்தி இன வன்முறைச் சம்பவங்களை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் இந்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் தீர்மானமானது இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், இந்தத் தீர்மானம் இதற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
சமூக வலையமைப்புக்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களின் போது இந்த சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென முஸ்லிம் பேரவை, பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளது.
பேருவளை அலுத்கம சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கூடிய விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post Top Ad