மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் -ஆரையம்பதி பாலமுனையில் ஜேவிபியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவினால் திறந்து வைப்பு-படங்கள். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 25, 2014

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் -ஆரையம்பதி பாலமுனையில் ஜேவிபியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவினால் திறந்து வைப்பு-படங்கள்.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய பாலமுனை பிரதான வீதியில் 25-06-2014 இன்று புதன்கிழமை பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜெ.எம்.ரவூப் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும்ääமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

இதன் போது மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத்; தலைவர் ரோஹண விஜேவீரவின் நினைவுருவப்படமும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விடுதலை முன்னணி முக்கியஸ்தர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜேவிபியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad