வட்டரக விஜித தேரர் தாக்கப்படவில்லை , தன்னைத்தானே தாக்கி கொண்டார் ! பொலிஸ் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 22, 2014

வட்டரக விஜித தேரர் தாக்கப்படவில்லை , தன்னைத்தானே தாக்கி கொண்டார் ! பொலிஸ் (வீடியோ இணைப்பு)


பொய் முறைப்பாட்டை செய்து பொலிஸாரை தவறாக வழிநடத்தியமை தொடர்பில் மஹியாங்கனை பிரதேச சபையின் உறுப்பினர் வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக வழக்கு தா்ககல் செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
தேரர் செய்த முறைப்பாடு பொய்யானது என்பது உறுதியாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வட்டரக்க விஜித தேரர், பாணந்துறை பிரதேசத்தில் வீதிக்கு அருகில் தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்து கிடந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்டார்.
இதன் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இனந்தெரியாத நபர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கிய பின்னர், குறித்த இடத்தில் கைவிட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வட்டரக்க விஜித தேரரின் உடலில் காணப்பட்ட காயங்கள் அவரால் ஏற்படுத்தப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
விஜித தேரர், தனக்கு காயத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அவரது உறவினர் ஒருவர், அவரை பாணந்துறை ஹிரண பிரதேசத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வட்டரக்க விஜித தேரர், பொதுபல சேனா அடிப்படைவாத பௌத்த அமைப்புக்கு எதிராக வெளிப்படையாக பேசி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad