ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் விஷேட அதிரடிப்படையினரால் தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் விஷேட அதிரடிப்படையினரால் தாக்குதல்


அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் வெலிப்பன்னையில் இனவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து இன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அன்ஸில் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டார்.

இத்தாக்குதல் தொடர்பில் தவிசாளர் அன்ஸில் ஊடகங்குளுக்கு கருத்துத் தெரிக்கையில்,
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூர இனவெறித் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவத்தினர் இருந்திருக்கக்கூடும் என்ற மக்களின் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலேயே இன்று விஷேட அதிரடிப் படையினர் மக்கள் மீதும் என்மீதும் தாக்கியதிலிருந்து மிக தெட்டத்தெளிவாக புலனாகின்றது.
இவர்களின் இத்தாக்குதல்களுக்குப் பயந்து நான் ஓடப்போவதில்லை. எமது மக்களுக்காகவும் சமூகத்துக்காகவும் எனது உயிரையும் உடமைகளையும் நான் இழக்கத் தயாராக இருக்கின்றேன். என்றார்.


No comments:

Post Top Ad