நாடு தீப்பற்றாதது சிலருக்கு கவலை ! இராணுவ பேச்சாளர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, June 24, 2014

நாடு தீப்பற்றாதது சிலருக்கு கவலை ! இராணுவ பேச்சாளர்

அளுத்கமை மற்றும் பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையை தேசப்பற்றாளர்கள் வரவேற்றுள்ள போதிலும் அந்த சம்பவத்தையடுத்து இந்நாடு தீப்பற்றி எரியவில்லையே என சிலர் கவலைப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.


பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

“இது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட இன்னும் பல இனங்களை கொண்ட நாடு என்பதனை நாடாளுமன்ற வரபிரசாதங்களை கொண்டுள்ள சிலர் மறந்து செயற்படுகின்றனர். தங்களுடைய வரப்பிரசாதங்களை பயன்படுத்தி சிலர், நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர். 

இனங்களுக்கு இடையிலான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை சிலர் முன்னெடுப்பதற்கும் முயற்சிக்கின்றனர். 

அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கு அடுத்து இந்நாடே தீபற்றி எரியும், இந்த சந்தர்ப்பத்தில் குழப்பிய குட்டையில் நாம் மீன் பிடித்து கொள்ளலாம் என்று சிலர் நினைத்தனர். எமது புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டினால் இந்நாடே தீ பற்றி எரியவிருந்தமை தடுக்கப்பட்டுவிட்டது.

அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்தையடுத்து மேற்குல நாடுகளின் தூதுவராலயத்திலிருந்து, நடந்தது போதாதா என்று வினவப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டை குழப்பி அதில் குளிர்காய்வதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான தேசத் துரோகிகள் தொடர்பில் மக்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். 

No comments:

Post Top Ad