'நாங்கள் இனவாதிகள் அல்ல' பொதுபல சேனா தளதாமாளிகையில் பூஜை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 25, 2014

'நாங்கள் இனவாதிகள் அல்ல' பொதுபல சேனா தளதாமாளிகையில் பூஜை(vi)

'நாங்கள் இனவாதிகள் அல்ல. கலகம் விளைவிக்கவும் இல்லை. ஊடகங்களுக்கு உண்மை தெளிவாகட்டும்" என வேண்டி பொதுபல சேனா அமைப்பினர் இன்று கண்டியில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.பொதுபல சேனா அமைப்பின் பௌத்த துறவிகள் சிலர் இணைந்து கண்டி தலதா மாளிகையில் நடத்திய அதிஸ்டான பூஜையின் போது, நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து நாட்டையும் சிங்கள மக்களையும் பௌத்த தர்மத்தையும் மீட்டுத்தர வேண்டுமென வேண்டி மேற்படி பூஜையை மேற்கொண்டனர்.

 
கண்டி தலதா மாளிகையின் எல்லைக்குள் பிரவேசித்த பொதுபல னோவின் செயலாளர் கலகொட அத்தேஞான சார தேரரிடம் மத்திய பிராந்தியப் பொலிஸ்மா அதிபர் பீ.பி. பெரமுன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் என்.என்.பி. அம்பன்வெல ஆகியோர் பொது பல சேனாவினரிடம் மேற்படி அதிஸ்டான பூஜைக்கு வேறு ஒரு இடத்தைத் தெரிவு செய்து கொண்டால் நல்லது என்றனர்.
 
இதற்குப் பதில் அளித்த அத்தேஞானசார தேரர்,
 
' எமது வேலைக்குத் தேவையான பாதுகாப்பை  உறுதி செய்யுங்கள்" என்று கூறி தலதா மாளிகையின் பூஜை அறைக்குச் சென்று மலர் வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 
 
பின்னர் பட்டிருப்புப் பகுதிக்கு வந்து அதிஸ்டான பூஜையை நிறைவு செய்தனர்.
 
அதன் போது 'நாம் இனவாதிகளும் அல்ல. நாம் இனக்கலவரத்தை ஏற்படுத்தவும் இல்லை. ஊடகங்களே திரிபு படுத்தியுள்ளன. எனவே ஊடகங்கள் தெளிவு பெறட்டும்" என பிராத்தனையில் வேண்டிக்கொண்டார்.
 

No comments:

Post Top Ad