தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக குரல் கொடுப்போம் !சந்திரகாந்தன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக குரல் கொடுப்போம் !சந்திரகாந்தன்


தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டியவர்களாக நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார்.
அளுத்கமவில் நடந்த வன்செயல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் முகமாகவும், உதவும் வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு முஸ்லிம் பிரமுகர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அளுத்கம பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு சென்ற அவர், தர்கா நகர் பள்ளிவாசலில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை முஸ்லிம் பிரமுகர்களூடாக வழங்கினார்.
மேலும் தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டியவர்களாக நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் எனவும் வன்செயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லீம் உறவுகளின் சார்பாக பங்கு கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.


No comments:

Post Top Ad