அளுத்கம- பேருவல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

அளுத்கம- பேருவல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்


அளுத்கம- பேருவல ஆகிய பிரதேசங்களில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதாகவும் அதனால் இன்று (18) காலை 8.00 மணி முதல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி மாலை குறித்த பிரதேசங்களில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களினால் மாலை 6.45 மணியளவில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்குச்சட்டத்தை மீறி செயற்பட்ட 41 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

அளுத்கம மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களில் நேற்று (17) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் சில மணி நேரங்களுக்கு நீக்கபட்டிருந்தது.

குறித்த பிரதேசங்களில் அமைதியை பேணும் வகையில் பொலிஸ்- பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் ஆகியன பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad