மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தால் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தால் (படங்கள் இணைப்பு)அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது முறையாகவும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், அவஸ்தைக்குள்ளாக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளைக் கண்டித்து அமைதியான சாத்வீக கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இந்த ஹர்த்தால் இடம்பெறுகின்றது.
இதனால் அரச, தனியார் நிறுவனங்களும், காரியாலயங்களும், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக அடைக்கப்பட்டிருந்தது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருப்பதனைக் காணக்கூடியதாக இருந்தது.
தற்போது இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையால் பாடசாலைகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்க வீதிகளில் பரவலாக பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


No comments:

Post Top Ad