பேருவளை தர்கா நகரில் தாக்கிய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்தனர் ! ஐ.தே.க.எம்.பி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

பேருவளை தர்கா நகரில் தாக்கிய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்தனர் ! ஐ.தே.க.எம்.பி


பேருவளை தர்கா நகரில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெரும மீது பேருவளையில் கடந்த 17 ஆம் திகதி இரவு பிரதேசத்தில் கலவரத்தை ஏற்படுத்திய பொதுபல சேனா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் விபரித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் கர்ப்பிணி தாய் ஒருவர் மற்றும் குழந்தைகளை காப்பற்றி அவரது வானில் ஏற்றி முயற்சித்த போது கலவரகார்கள் தாக்குதல் நடத்தியதுடன் வானையும் சேதப்படுத்தியிருந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
பொலிஸாரும் அதிரடிப்படையிரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தான் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தெவரப்பெரும மேலும் தெரிவிக்கையில்,
தர்கா நகரில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தேடிப்பார்பதற்காக 17 ஆம் திகதி இரவு நான் அங்கு சென்றிருந்தேன்.
அப்போது பயங்கரவாதிகள் குழுவொன்று வாள்கள்,பொல்லுகள் சகிதம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களை சுற்றிவளைத்து கொண்டு அவர்களை கொலை செய்ய முயற்சித்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட நான் வானில் இருந்து இறங்கி பெண்களையும் சிறுவர்களையும் காப்பற்றி வானில் ஏற்றினேன். இதன் பின்னர் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வயதான அம்மா ஒருவரும், கர்ப்பிணி தாய் ஒருவரும் பிள்ளைகளுடன் காணப்பட்டனர். அந்த பிள்ளைகளுக்கு 6,7, 13 வயது இருக்கும்.
இவர்களை நான் எனது டொல்பின் வானில் ஏற்றிச் செல்லும் போது பயங்கரவாதிகள் கல், இரும்பு கம்பிகள், மணல் நிரப்பிய போத்தல்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் கைக்குழந்தையின் தலையின் மீது போத்தல் பட்டு காயம் ஏற்பட்டது. வயதான அம்மா மீதும் போத்தலை வீசி தாக்கினர்.
கைக்குழந்தையின் உயிரை காப்பற்ற முடியாது போகும் நிலைமை காணப்படுகிறது. காயமடைந்த அம்மா நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.
இது அதிசயமான நிலைமை பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர். அவர்களுக்கு சற்று தொலைவில் அதிரடிப்படையினரின் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.
பொலிஸாரும், அதிரடிப்படையிரும் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் . அவர்கள் தாக்குதல் நடத்தினர். கொலை செய்தனர்.
நான் எனது வானை பொலிஸ் வானில் மோதி விட்டு தப்பி வந்தேன். புதிய வான் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் என் கண்ணுக்குள் கண்ணாடி துகள்கள் சென்றுள்ளன எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
No comments:

Post Top Ad