அரசாங்கம் பொதுபல சேனாவை என்ன செய்யப் போகிறது ? அடுத்த வாரம் வரை காத்திருப்போம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 22, 2014

அரசாங்கம் பொதுபல சேனாவை என்ன செய்யப் போகிறது ? அடுத்த வாரம் வரை காத்திருப்போம்


அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விடயங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பதற்றமான நிலைமையை ஏற்படுத்தும் சிலர் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு தூதரங்கள் ஊடாக நேரடியாக நிதியுதவிகள் கிடைத்து வருவதாக இதன் போது தகவல் வெளியிடப்பட்டது.
வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் நிதியுதவியை பெற்று வரும் ஒரு நபரின் பெயரும் இதன் போது தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சகல விடயங்களையும் அடிப்படையாக கொண்டு அரசாங்கம் அடுத்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது.
பொதுபல சேனா அமைப்புக்கு அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகளிடம் இருந்து நிதியுதவிகள் கிடைத்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அதனை பொதுபல சேனா அமைப்பு மறுத்திருந்தது. பொதுபல சேனா அமைப்பின் பிக்குமாருக்கு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் பணம் வைப்பில் இருப்பதாக அந்த அமைப்புக்கு எதிரான பிக்கு ஒருவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்

No comments:

Post Top Ad