தலதா மாளிகையில் பொதுபல சேனாவுக்கு பூஜை நடத்த அனுமதியளித்ததை போன்று முஸ்லிம்களுக்கு காலி முகத்திடலில் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் ! அசாத் சாலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 26, 2014

தலதா மாளிகையில் பொதுபல சேனாவுக்கு பூஜை நடத்த அனுமதியளித்ததை போன்று முஸ்லிம்களுக்கு காலி முகத்திடலில் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் ! அசாத் சாலி

தலதா மாளிகைக்கு எதிரில் பொதுபல சேனா அமைப்புக்கு மனவுறுதி பூஜையை நடத்த முடிந்த காரணத்தினால், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் காலிமுகத் திடலில் தொழுகையை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட மோதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனாவுக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு கண்டி நாத ஆலயத்தில் நேற்று முன்தினம் மனவுறுதி பூஜையை நடத்தியது.
இந்த பூஜைக்கு அனுமதி வழங்க பொலிஸார் மறுத்த நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எவ்வாறாயினும் பொதுபல சேனாவின் இந்த பூஜை காரணமாக கண்டி பிரதேசத்தில் எவ்விதமான பதற்றமும் ஏற்படவில்லை.

No comments:

Post Top Ad