நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் ! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் ! ஜனாதிபதி


அளுத்கமை,பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சற்று முன்னர் பேருவளைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மோதல்கள் நடைபெற்ற பிரதேசங்களில் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பேருவளை பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தார்.
பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள், முஸ்லிம் மத தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவும் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.

No comments:

Post Top Ad