பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறு ஜெயினுதீன் லாகீர் கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறு ஜெயினுதீன் லாகீர் கோரிக்கைபேரினவாதிகளின் இன அழிப்பு ஆக்கிரமிப்பில் உயிர்கள்,உடமைகள் , பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ள எமது முஸ்லிம் சமூகத்துக்கு உதவ முன்வாருங்கள்.

உங்கள் உதவிகளை உங்கள் ஊர்களில் உள்ள பள்ளிவாசல் தலைவர்களிடம் கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு சென்றடையச் செய்ய அனைத்து தரப்பினருக்கும் இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.


அத்தோடு மிக அமைதியாக இருந்த இலங்கை தேசத்துக்குள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்டுள்ள பேரினவாதிகளை நான் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த காட்டுமிராண்டிகளின் தாக்குதலில் இலக்காகி சஹீதாக்கப்பட்ட எமது சகோதரர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்கி வைப்பானாக ! ஆமீன்.

மேலும் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக நோன்பு வைத்து தொழுது துஆ செய்துகொள்ளுமாறும் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜெயினுதீன் முஹம்மது லாகீர்
திருகோணமலை மாவட்ட சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினர்.

No comments:

Post Top Ad