ஞானசார தேரர் மிகப்பெரும் பயங்கரவாதி : ரிசாத் பதியுதீன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

ஞானசார தேரர் மிகப்பெரும் பயங்கரவாதி : ரிசாத் பதியுதீன்
(vi)

பொதுபலசேனா அமைப்பு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், இனவாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் உடனடியாக அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
 
 சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் பேருவளை மற்றும் அளுத்கம சிங்கள பிரதேச எல்லைகளில் வாழும் முஸ்லிம்கள் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்து பேருவளை அல் - ஹ{மைசரா மத்திய கல்லூரியில் தஞ்சமடைந்துள்ளார்கள். 
 
அங்கு அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் அரச உயர் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளேன்.
 
பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகளும் சொத்து அழிவுகளுக்கும் பொதுபலசேனாவின் ஞானசார தேரர் பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வேதனையும் வெட்கமும் அடைகிறேன். அளுத்கம மற்றும் பேருவளை பிரச்சினைக்கு இந்நாட்டில் தீர்வு கிடைக்காவிடின் சர்வதேசத்தை நாடவும் பின்னிற்கப்போவதில்லை.
 
ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி. பொதுபலசேனாவை தடை செய்வதற்கும், ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டு கோஷமெழுப்ப முன்வர வேண்டும்.
 
அளுத்கம, தர்கா நகர், பேருவளை முஸ்லிம்கள் மீது இனவெறி பிடித்த காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சென்று பார்த்தேன். இவ்வாறான நாசகார செயல்களை செய்த பௌத்த தீவிரவாத அமைப்புக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.
 
முஸ்லிம்கள் மீதான தாக்குதலினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள், சொத்தழிப்புக்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இயல்பு வாழ்க்கையினை மீள கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அரச உயர் தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad