மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டால் முஸ்லிம்களே பொறுப்பு ! ஹெல உறுமய - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டால் முஸ்லிம்களே பொறுப்பு ! ஹெல உறுமய


மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பினை முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அளுத்கம, பேருவளை பிரதேசத்தில் தற்போது இயல்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஹர்த்தல் மற்றும் போராட்டங்களை நடத்தினால் மீளவும் வன்முறைகள் வெடிக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு வன்முறைகள் வெடித்தால் அதற்கான பொறுப்பினை ஹர்த்தால் நடாத்தும் முஸ்லிம் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஹர்த்தால் மற்றும் போராட்டங்களின் மூலம் சிங்கள பௌத்த கடைகள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஒமல்பே சோபித தேரர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

No comments:

Post Top Ad