முஸ்லிம்களுக்கு எதிரன வன்முறைகளை கண்டித்து நாளை போராட்டம் நடத்த யாழ்.பல்கலை மாணவர்கள் தீர்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

முஸ்லிம்களுக்கு எதிரன வன்முறைகளை கண்டித்து நாளை போராட்டம் நடத்த யாழ்.பல்கலை மாணவர்கள் தீர்மானம்


முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து நாளைய தினம் ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.
மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி க் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3 தினங்கள் நடைபெற்றிருக்கின்றது. இதில் 3மாத குழந்தை உட்பட 4பேர் உயிரிழந்துள்ளதுடன் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும், பல லட்சக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் உள்ளன.
இந்நிலையில் மிக மோசமானதும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும் வகையிலும் அமைந்திருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை நண்பகல் 12மணி தொடக்க ம் 1 மணி வரையில் குறித்தபோராட்டம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடத்தப்படும்.
இதில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர் என அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad