முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு அஸ்வர் கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, June 24, 2014

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு அஸ்வர் கோரிக்கை

தெஹி­வ­ளைப்­ ப­கு­தியில் ஹபாயா, விற்­பனை நிலையம் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்தைக் கண்­டித்­துள்ள ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்பெறு­வதை தடுப்ப­தற்கு பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்று கோரி­யுள்ளார்.
 
தெஹி­வளை - ஹில்­வீ­தியில் அமைந்­துள்ள ஹபாயா விற்­பனை நிலையம் மீது நேற்று முன்­தினம் அதி­காலை இனந்­தெ­ரி­யாத நபர்கள் கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர். இந்தத் தாக்­கு­தலில் விற்­பனை நிலை­யத்தின் கண்­ணா­டிகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. தாக்­கு­தலில் சேத­ம­டைந்த விற்­பனை நிலை­யத்தை நேற்று முன்­தினம் சென்று பார்­வை­யிட்ட அஸ்வர் எம்.பி. அங்­கி­ருந்து பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்க­கோ­னு­டனும் பிரதி பொலிஸ் மா அதிபர் அனு­ர­ சே­ன­நா­யக்­க­வுடனும் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டுதெஹி­வ­ளையில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கடைகள், தாக்­கப்­பட்டு வரு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.
 
அத்­துடன், இப்­ப­கு­தியில் ரோந்­துப்­ப­ணி­களை அதி­க­ரித்து வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பை அதி­க­ரிக்­க­வேண்டும். இத்­த­கைய தாக்­கு­தல்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேஇந்த அச்சத்தைப் போக்கவேண்டியது இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

Fowzer said...

Adi seruppala. Enga irunthu wanthaar intha Aswer tharer? Iwwalavu naalum enga poi irunthaaro? oho, Englanduku poi irunthaaro cricket commentry panna. Waaya moodittu iruda wengaayam.

Post Top Ad