மட்டு.கல்லடி வாவியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 04, 2014

மட்டு.கல்லடி வாவியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் லேடி மெனிங் வீதியில் வாவிக் கரையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு, பாடுமீன் வீதியை சேர்ந்த சின்னத்தம்பி சித்திவேல் (70வயது) என்பவருடையது என உறவினர்களினால் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாவியில் குளிக்கச்சென்றவர் அதில் மூழ்கிய உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோய்வாய்ப்பட்டிருந்த அவர் காலையில் தினமும் வாவிக்கு சென்று குளித்துவரும் நிலையிலேயே இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதவானின் அறிவுறுத்தலின் கீழ் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments:

Post Top Ad