எனக்கு பலவந்தமாக சுன்னத்து செய்யப்பட்டது ! விஜித தேரர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

எனக்கு பலவந்தமாக சுன்னத்து செய்யப்பட்டது ! விஜித தேரர்

இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டதாக கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேர்ரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தகவலை பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள்.
அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.
தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.
ஆனால், தேரர் தனக்குத் தானே இந்தக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இவை குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பி.பி.சி

No comments:

Post Top Ad