(இலங்கையில்) மிகச் சிறந்த அமல் செய்வோம்: - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 25, 2014

(இலங்கையில்) மிகச் சிறந்த அமல் செய்வோம்:(அபுஅரிய்யா)

தற்போதைய இலங்கை சூழலில் எமது முஸ்லிம் சமூகம் செய்தாக வேண்டிய மிகச் சிறந்த அமல் குறித்து அல்குர்ஆனின் வசனங்களிலிருந்து புரிந்து கொள்வோம்.


ஸ{ரா அஸ்ரில் காலத்தின் மீது சத்தியம் செய்து மனிதன் நஷ்டத்தில் இருப்பதாகக் கூறும் இறைவன் பின்வருவோரைத் தவிர என்பதாக விளக்குகிறான்.

அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு நல்லமல்கள் செய்துää சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும்ää நன்மையைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டம்)  சகித்துக்கொள்ளுமாறும் (பொறுமை); ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துவந்தார்களோ அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நஷ்டத்தில் உள்ளதாக அல்லாஹ்; குறிப்பிடுகிறான்.

மனிதனை இவவுலகில் படைத்து அவன் எவ்வாறு வாழ வேண்டுமென்று வழிகாட்டிய இறைவன் இந்த வசனங்கள் ஊடாக மிகப்பெரும் தெளிவை எமக்கு வழங்குகிறான். அந்தவகையில் மனிதனது வாழ்வையும் அதற்குள்ளால் அவனது பணியையும் நிர்ணயிக்கும் மிகப்பெரும்; அமானிதமே காலமாகும். மனிதன் தனது வாழ்நாளின்; ஒவ்வொரு காலப்பகுதி  குறித்தும் மறுமையில் விசாரிக்கப்படுவது போல மனித சமூகமும் அது வாழ்ந்த காலத்துக்கேட்ப அவர்கள் செய்த செயற்பாடுகள் குறித்தும் விசாரணைக்குட் படுத்தப்படுவார்கள்; என்பது மறுமை விசாரணையின் போது காலம் குறித்து அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள  நியதியாகும்.

இவ்வாறாக காலத்தை நிர்ணயித்த அல்லாஹ் அதன் முக்கியத்துவத்தின் மீது சத்தியமிட்டு மனிதன் கருமமாற்ற வேண்டிய பணியை இவ்வாறு தெளிவு படுத்துகிறான். முதலில் அவன் அல்லாஹ்வை உரியவாறு தௌஹீதின் அடிப்படையில் எவ்வித  சந்தேகமுமின்றி விசுவாம் கொள்ள வேண்டும். அந்த விசுவாசத்தின் மீதான பிரதிபலிப்பாக அவனில் மிகச் சிறந்த செயற்பாடுகள் (அமல்கள்) ; வெளிப்பட வெண்டும். அதுபோல் உண்மையை (இஸ்லாத்தை) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்கின்றபோது ஏற்படும் சோதனைகள் ää கஷ்டங்களின் போது சகித்துக்கொளளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் நஷ்டமடைந்தவர்களாகிறார்கள்.

இதனை மனித வரலாற்றில் நபிமார்களின் பிரச்சாரப் பணிகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும். உதாரணராக இப்ராஹீம்(அலை) – சிலை வணக்கத்துக்கெதிரான போராட்டம்ää மூஸா(அலை) - சர்வதிகாரி பிரவ்னுக்கெதிரான அரசியல் போராட்டம்ää லூத்(அலை) - கலாச்சார சீரழிவுக்கெதிரான போராட்டம்ää ஐயுப்(அலை) – அளவை நிறுவை இவ்வாறாக ஒவ்வொரு நபிமார்களினது போராட்ட வழிமுறையும் வேறுபடுகிறது.

இங்கு படிப்பினை பெற வேண்டிய மிகப்பெரும் உண்மை நாம் வாழும் காலம்ää சமூக அமைப்புää பெற்றுக்கொண்டுள்ள வளம்ää அறிவுத்தரம்ää நம்மீதுள்ள பலம் ஆகியவற்றை பயன்படுத்தி மிகச் சிறந்த அமலை(செயற்பாட்டை)  செய்ய வேண்டும். அது அல்லாஹ்வும் ரஸ{லும் வழிகாட்டிய பிரகாரம் அமைய வேண்டும் இவ்விடயத்தில் ஒருவருக்கொருவர் உபதேசித்துக்கொள்பவர்களாகவும்ää இப்பணியில் நிச்சயிக்கப்பட்டிருக்கும் கஷ்டங்கள் சோதனைகள் வரும் போது அதனைக் கண்டு சோர்ந்து விடாமல் சகித்துக்கொண்டு (பொறுமையோடு) தொடர்ந்தும் தனது மிகச் சிறந்த அமலை(செயற்பாடுகளை) செய்ய வேண்டுமென்றுதான் அல்லாஹ் தான் படைத்த மனித சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றான் போலும்.

அந்த வகையில் இலங்கையில் தற்போது நாம் வாழும் காலத்துக்குள்ளால் செய்ய வேண்டிய மிகச் சிறந்த அமல்(செயற்பாடுகள்) என்ன? இது குறிதது தெளிவான அறிவு பெறாமல் தொடர்ந்தும் பொறுமையாக இருப்போம்ää சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்வோம் என்ற வழிகாட்டல் மாத்திரம் சமூகத்தை வழிநடாத்த போதுமானதா?

இது குறித்து எம் சமூகத் தலைமைகளும் அறிஞர்களும் சிந்தித்து கருமமாறறுவதே சிறந்த செயற்பாடாகும்.

No comments:

Post Top Ad