புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்து புனித மஸ்ஜிதுல் ஹராம் மக்காவுக்கு வருகை. (அழகிய படங்கள் இணைப்பு ) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, June 10, 2014

புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்து புனித மஸ்ஜிதுல் ஹராம் மக்காவுக்கு வருகை. (அழகிய படங்கள் இணைப்பு )(சவூதி அரேபிய மக்கா நகரில் இருந்து -பழுலுல்லாஹ் பர்ஹான்)

பல மில்லியன் கணக்கான இஸ்லாமிய மதத்தவர்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆகாயம் மூலமாகவும் தொடரூந்துகள் மூலமாகவும் சவூதி அரேபிய நாட்டின்  புனித மக்கா நகரத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்த வண்ணமுள்ளதாக இலங்கையிலிருந்து புனித மக்கா சென்ற எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இதில் இலங்கைääஇந்தியாääஇந்தோனேஷியாääசூடான்ääகட்டார்ää ஈரான்ääஎஹிப்துääஈராக்ääமலேஷியாääபாகிஸ்தான்ääடுபாய்ääதுருக்கிää எமன் போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் ஆண்கள்ääபெண்கள் தினமும் வருகை தருகின்றனர்.

அங்கு வருகைதரும் முஸ்லிம்கள் இஹ்ராம் ஆடை அணிந்து முதலில் புனித கஃபாவை ஏழு தடவை வழம் வருவதோடு ஹஜருல் அஸ்வத் கல்லையும் முத்தமிட்டு ääமகாமு இப்ராஹிமுக்கு பின்னால் இரண்டு ரகாஅத் சுன்னத்துக்களையும் தொழுவதோடு ஸம்ஸம் நீரையும் அருந்தி சபா மர்வா மலைகளுக்கிடையில் ஏழு தடவை தொங்கோட்டம் ஓடுவதோடு தங்களது தலைகளையும் மொட்டை இடுகின்றனர்.

இஸ்லாத்தில் நான்காவது கடமையான புனித ரமளான் மாதம் எதிர்நோக்கி வருவதால் அதிகமாக முஸ்லிம்கள் தற்போது புனித மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு சவூதி அரேபிய மக்கா நகரில் தற்போது அதிகமான உஷ்ணம் நிலவுகின்ற போதிலும் அதனையும் பாராது இரவு பகலாக பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் புனித மஸ்ஜிதுல் ஹராம் கஃபாவில் வழிபாடுகளில் ஈடுபகின்றனர்.No comments:

Post Top Ad