தாக்குதலுக்குள்ளான அலுத்கம மக்களை பார்வையிடச் சென்ற சிராஸ் மீராசாஹிப் மீது இனவாதிகள் தாக்குதல் முயற்சி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

தாக்குதலுக்குள்ளான அலுத்கம மக்களை பார்வையிடச் சென்ற சிராஸ் மீராசாஹிப் மீது இனவாதிகள் தாக்குதல் முயற்சி (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காடைத்தனமான இனவாத தாக்குதலுக்குள்ளான அலுத்கமஇ தர்ஹா நகர் மக்களை பார்வையிடச் சென்ற கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றோபொலிடென் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பயனித்த வாகனத்தை இனவாதிகள் வழி மறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது பொலிசாரினால் குறித்த தாக்குதல் முறியடிப்புச் செய்யப்பட்டு மயிரிழையில் தப்பினார்.


காலி அதிவேக நெடுஞ்சாலை ஊடாக அலுத்கமஇ தர்ஹா நகரை அண்மிக்கும் போதே குறித்த வழிமறிப்பு சம்பவம் இடம்பெற்றது. பாதை ஓரங்களில்  சந்திக்கு சந்தி பொல் மற்றும் கற்களுடன் கூடி நின்ற இனவாத காடையர்கள்  கூட்டமே மேற்படி தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தனர். ​

இனவாத காடையர்களின் தாக்குதலுக்குள்ளான பெரும்பாலான மக்கள் பேருவளை சீனங்கோட்டை அல்-ஹூமைசா பாடசாலையில் அகதிகளாக உள்ளனர்இ ஒரு சில குடும்பங்கள் உறவினர்களின் இல்லங்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்-ஹூமைசா பாடசாலையில் 479 ஆண்கள்இ 501 பெண்கள்இ 16 கர்பினி தாய்மார்கள்இ 55 தாய்ப்பால் மற்றும் 153 பொட்டிப்பால் அருந்தும் குழந்தைகள்இ 60 வயதிற்கு மேற்பட்ட 27 வயோதிபர்கள் உள்ளிட்ட 264 குடும்பங்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இம்மக்களை சிராஸ் மீராசாஹிப் சந்தித்தபோது அவ்ரகளின்  உளக் குமுரல்கள் மிக வேதனையோடு வெளிப்படுத்தினர். அம்மக்கள் தங்களது இருப்பிடமிளந்துஇ உடமைகளை இளந்துஇ உடன் பிறப்புகளின் உயிர்களை இழந்து பரிதவிக்கின்றனர். இனிமேலும் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும் என்ற நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.
ஜாமியா நழீமியா கலா பீடம் தற்போது மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டு அம்மாணவர்கள் தங்ஙகளது இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிராஸ் மீராசாஹிப் இம்மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி ஆசுவாசப்படுத்தினார்.


No comments:

Post Top Ad