காத்தான்குடியைச் சேர்ந்த அஹ்மத் மாஸின் எனும் மாணவர் சவூதி அரேபியாவில் உயர்தரப்பரிட்சையில் முதலிடம் பெற்று சித்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 29, 2014

காத்தான்குடியைச் சேர்ந்த அஹ்மத் மாஸின் எனும் மாணவர் சவூதி அரேபியாவில் உயர்தரப்பரிட்சையில் முதலிடம் பெற்று சித்தி(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.ஏ அஹ்மத் மாஸின் எனும் மாணவர் சவூதி அரேபியாவில் உயர்தரப்பரிட்சையில் முதலிடம் பெற்று சித்தியடைந்துள்ளார்.


இவர் தனது ஆரம்பக்கல்வியை சவூதி அரேபியாவிலுள்ள கமீஸ் முஸைதில் அமைந்துள்ள அஸீர் சர்வதேசப் பாடசாலையில் ஆங்கில மொழி மூலம் ஆறு வருடங்கள் கற்ற பின் மட்டக்களப்பிலுள்ள ஈஸ்டன் கல்லூரியல் ஒரு வருடம் ஆங்கிலமொழி மூலம் கற்றுள்ளார்.

பின்னர் சவூதி அரேபியாவிலுள்ள அப்ஹாவில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் அறபுமொழி மூலம் மூன்று வருடம் சாதாரணதரத்தை கற்ற இவர் எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பாடசாலையொன்றில் சாதாரணதரப் பரிட்சை எழுதி முதல் தரத்தில் சித்தியடைந்து ஷைகுல் அஸ்ஹரினால் கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் சவூதி அரேபியாவிலுள்ள நஜ்ரானில் அமைந்துள்ள மத்ரஸதுல் இமாம் கலப் எனும் பாடசாலையில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர்குளுக்கு மத்தியில் உயர்தரப் பரிட்சையில் சராசரி 97.94 பெற்று முதல் தரத்தில் சித்தயடைந்து பல்கலைகழகத்தற்கு தெரிவாகியுள்ளார்.

இவர் சவூதி அரேபியா நஜ்ரான் பல்கலைகழக இணைப்பேராசிரியர் கலாநிதி யூ.எல். அஹ்மத் அஷ்ரபின் மகனாவார்.


No comments:

Post Top Ad