இன.மத முரண்பாடுகளை தூண்டும் தேரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் ! அமைச்சர் திஸ்ஸ விதாரண - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 26, 2014

இன.மத முரண்பாடுகளை தூண்டும் தேரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் ! அமைச்சர் திஸ்ஸ விதாரண

மத முரண்பாடுகளை தூண்டும் பௌத்த பிக்குகள் தண்டிக்கப்பட வேண்டுமென சிரேஸ்ட அமைசச்ர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இன மத முரண்பாடுகளை தூண்டும் வகையில் செயற்படும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக அந்தந்த பீடங்களைச் சேர்ந்த மாநாயக்கத் தேரர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளவும் இருண்ட யுகத்திற்குள் அழைத்துச் செல்ல எவரும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என திஸ்ஸ விதாரண சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad