முஸ்லிம்கள் அமைதியாக இருக்கணும் ! அஸ்வர் எம்.பி சொல்றார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

முஸ்லிம்கள் அமைதியாக இருக்கணும் ! அஸ்வர் எம்.பி சொல்றார்பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம் பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே, முஸ்லிம் மக்கள் அமைதியாக இருக்குமாறு ஊடகத்துறை அமைச்சின் பேர்வை எம்பியான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுக்கிறார். 

எமது இணையத்தளத்தினூடாகவே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.அரும்பாடு பட்டே முப்பது வருட யுத்தத்தை ஜனாதிபதி முடிவு கொண்டு வந்தார். 

இவ்வாறு பெறப்பட்ட அமைதியை இழக்க எவரும் விரும்ப மாட்டார்கள். நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதியே மிக முக்கியமாகும். எனவே அனைவரும் அமைதியை பேண வேண்டும். குறுகிய அரசியல் லாபத்துக்காக ஒரு சில இயக்கங்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றனர். 

எனவே இவற்றுக்கெல்லாம் ஏமாறாது எமது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமையினால், நாட்டின் நலன் கருதியும், நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களின் நலன் கருதியும் அனைவரும் 'ஸபூர்' எனும் பொறுமை பேணுவோம்.  எனவும் மேலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உலமாக்களுக்கும் முக்கிய பங்குண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

A.R.Nowzath said...

You are still alive. We thought that BBS has kidnapped you. You are reaching 80+/90+ years old. Before your die, utter some word for Muslim community. Otherwise you will be punished into the grave and hell.

Post Top Ad