அன்ஸில் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜெயினுதீன் லாகிர் கடும் கண்டனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

அன்ஸில் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜெயினுதீன் லாகிர் கடும் கண்டனம்முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து இன்று அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினருமான எம்.ஏ.எம்.அன்ஸில் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினரும் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ஜெயினுதீன் முஹம்மது லாகிர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தவிசாளர் எம்.ஏ,எம்.அன்ஸிலை தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாரிய தண்டனைகள் வழங்க பொலிஸ் மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post Top Ad