பேரினவாத தீய சக்திகள் -முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அழிவு நடவடிக்கைகளை நாடாளாவிய ரீதியில் ஏட்படுத்துவதற்காக மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

பேரினவாத தீய சக்திகள் -முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அழிவு நடவடிக்கைகளை நாடாளாவிய ரீதியில் ஏட்படுத்துவதற்காக மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக மேட்கொள்ளப்படும் அநியாயமான அநீதிகளுக்கு எதிராக எல்லா வகையிலும் அவரவர் சக்திக்குட்பட்ட அளவுக்கு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக எல்லோரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் விடுத்துள்ள ஊடக அறிக்கை தெரிவித்துள்ளார்.


அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆனாலும் பேரினவாத தீய சக்திகள் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அழிவு நடவடிக்கைகளை நாடாளாவிய ரீதியில் ஏட்படுத்துவதற்காக மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும்ääஇஸ்லாத்தை மறுப்பவர்களுக்கும் இடையிலான ஒரு போராட்டம்.கலிமா சொன்ன ஒரே காரணத்திற்காக எமது சமூகம் உயிர்களை இழந்துääஉடமைகளை இழந்து தொடர்ச்சியாக வன்முறைகளுக்குள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.இறைவன் புனித குர்ஆனிலே கூறுவது போன்று “இவர்கள் அல்லாஹ்வினுடைய தீனை வாயினால் ஊதி அணைக்க முட்படுகின்றார்கள்.ஆனால் அது அல்லாஹ்வின் உதவி கொண்டு பிரகாசித்து கொண்டிருக்கும்.

எங்களுடைய பள்ளிகளை எரிப்பதாலும்ääகுர்ஆன்களை அழிப்பதாலும் இந்த அறிவீனர்கள் நினைக்கின்றார்கள் இஸ்லாத்தை ஒழித்துவிட முடியும் என்று.அவர்களுடைய அறியாமையே அவர்களுடைய நாசத்திற்கு வழிவகுக்கப்போகின்றது.இதற்கு உதாரணமாக வடக்கிலே இருந்த 78க்கும் மேற்பட்ட பள்ளிகள் இல்லாதொளிக்கப்பட்டும்ääகுர்ஆன்கள் எரிக்கப்பட்டும் இறைவனை சுஜூது செய்து கொண்டிருந்த மக்கள் பள்ளிக்குள்ளே கொல்லப்பட்டும் இருந்த போதெல்லாம் இறைவன் உடனடியாக இவ்வாறான செயல்களை செய்தவனை தண்டிக்கவில்லை.

இவ்வளவு அநீதிகளுக்கு பிறகும் கூட மிகப்பெரும் படைப்பலத்ததையும்ääஆயுத பலத்தையும் கொடுத்தான்.ஆனால் முஸ்லிம்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிääஅநீதி செய்யப்பட்டவர்களின் துஆ அங்கீகரிக்கப்பட்டதால் மிகக் கேவலமாக அதற்குப் பொறுப்பானவன் தண்டனை அனுபவித்தான்.உலகமே வியந்து பார்கின்ற அளவுக்கு இருந்த அந்த பயங்கரவாத இயக்கம் பெயரைக்கூட சொல்வதற்கு ஒருவர் இல்லாத அளவுக்கு அதனை கூண்டோடு ஒழித்தான்.பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்ற வசனத்தை எங்களுக்கு நிரூபித்துக் காட்டினான்.பேருவளைääதர்கா நகர்ääஅளுத்கம போன்ற இடங்கலில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் யுத்த காலங்களிலும்ääஅதற்கு முந்திய காலங்களிலும் முஸ்லிம்களுக்காக வாரி வழங்கியவர்கள்.அவர்களுடைய சதகாääதான தருமங்கள் நிச்சயமாக அவர்களை பாதுகாக்கும்.

அதே போன்று இன்று காத்தான்குடியை சேர்ந்த சகோதரர் முபாறக் அவர்களுடைய 50 கோடி ரூபாய்க்கு மேல்  பெறுமதியான அந்த சொத்து அழிக்கப்பட்டது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதääசகிக்க முடியாத ஓர் கவலையான விடயமாகும்.சகோதரர் முபாறக் அவர்கள் நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்கள்ääமுஸ்லிம் அல்லாதவர்கள் என்று பார்க்காமல் தன்னுடைய சொத்திலே இருந்து இறைவனுக்காக வாரி வழங்கியவர்.

இன்று ஏற்பட்ட அசம்பாவிதம் என்பது மூவின மக்களுக்கும் சேவை செய்கின்ற ஒரு சேவகனுக்கு செய்கின்ற அநீதியாகும்.இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.இதற்கு பொறுப்பானவர்ககளை சட்டம் தண்டிக்காமல் பாராமுகமாக இருந்தாலும் எல்லாம் வல்ல இறைவனின் தீர்ப்பு அநீதி அக்கிரமங்களை எல்லாம் கர்வத்துடன் புரிந்த அண்மைக்கால அக்கிரமக்காரர்களுக்கு ஏட்பட்டதைப்போல் நும்ரூத்ääஹாமான்.பிர்அவ்ன் போன்றோருக்கு ஏட்பட்டதைப்போன்றும் செயற்படுத்த இறைவனால் முடியும்.அல்லாது போனால் பாபர் மஸ்ஜிதை உடைத்தவர்களைக்கொண்டு இறைவன் பள்ளிகளை கட்ட வைத்திருக்கின்ற அந்த செயல்களைப்போல் நமக்கு எதிராக அணி திரண்டு இருக்கின்றவர்கள் எங்களை பாதுகாக்கின்றவர்களாக இறைவனால் மாற்ற முடியும்.ஆகவே நாங்கள் மிகவும் பொறுமையாகவும்ääமிகவும் நிதானமாகவும் இதனை கையாள்வதுடன் ஒவ்வொரு வக்திலும் எமது உம்மத்திட்காக நாங்கள் இறைவனிடம் மன்றாடுவோம்.

முடியுமானால் நோன்பு நோற்று எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.சதி காரர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய சதிகாரன் நாங்கள் நம்புகின்ற எல்லாம் வல்ல இறைவன். பொறுமை காத்து இறைவனை நெருங்குவோம் என அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad