பொதுபல சேனாவை தடைசெய்யக் கோரி ஏறாவூர் ஜம்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு மஹஜர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

பொதுபல சேனாவை தடைசெய்யக் கோரி ஏறாவூர் ஜம்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு மஹஜர்

(tm)

பொது பல சேனா அமைப்பைத் தடை செய்யக்கோரியும் சமீபத்திய கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


ஏறாவூர் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நண்பகல் தொழுகையின் பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையில் சமாதான சௌஜன்ய வாழ்வுக்காகப் பிரார்த்தனை இடம்பெற்ற பின்னர் இந்த மகஜர், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவிடம் கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையின் தலைவர் ஏ.டபிள்யூ.எம்.ஹாரிஸ் (ஹாஷிமி), உபதலைவர்களான எம்.எல். அப்துல்வாஜித், எஸ்.எம்.பரீட், செயலாளர் யூ. அப்துல்மனாப், உபசெயலாளர் எஸ்.ஏ.எம். நளீம் ஆகியோரும் பெருந்தொகையான பொதுமக்களும் இந்த பிரார்த்தனை நிகழ்விலும் ஊர்வலத்திலும் மகஜர் கையளிப்பிலும் கலந்து கொண்டனர்.

உடனடியாக இந்த மகஜரை தாங்கள்; அரசாங்க அதிபரிடம் கையளிக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா ஆகியோர் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையினரிடமும் பொதுமக்களிடமும் தெரிவித்தனர்.

No comments:

Post Top Ad