யாழில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

யாழில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இனந்தெரியாத நபர்களினால் இன்று சனிக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள முஸ்லிம் வட்டாரம் என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசலே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
முஸ்லிம் வட்டாரம் என்னும் பகுதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசலின் மீதே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாக பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad