நோலிமிட் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் நாசகார செயல் ! ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

நோலிமிட் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் நாசகார செயல் ! ஹக்கீம்


 பாணந்துறையில் உள்ள நோலிமிட் மிகப் பெரிய உடுப்புக்கள் மற்றும் அலங்கார அணிகள் கொண்ட 3 மாடிகளைக் கொண்டவையாகும். நேற்று இரவு நடுநிசியில் நாசகார வேலையாளர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

நோலிமிட்டின் பின்புறமாக கூரையின் மேல் ஏறி உள்ளுக்குள் தீ வைத்துள்ளனர். ஆனால் இந் நிலையத்தை வளைத்து வைத்தியசாலை பொலிஸ் நிலையம், ஏனைய வியாபார நிலையங்கள் உள்ளன.
5 மணிக்கே தீயணைக்கும் படையினர் வந்து தீயணைக்கின்றனர். ஆனால் சகலதும்  முற்றாக அழிந்து எரிந்து சாம்பலாகியுள்ளது.
நோலிமிட்டின் மிகப் பெரிய வியாபார ஸ்தாபனம், கடந்த 2 வருடங்களை சொந்தக் கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அண்மையில் அருகில் பாணந்துறை உள்ள வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மாணித்து கொடுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாணந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் றெஜினோல்ட் குரே ஆகியோரும் பார்வையிட்டுள்ளனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாங்கள் அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளோம். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்
அமைசச்ர்  றெஜினோல்ட் குரே,  இது பாணந்துறையிலும் முஸ்லிம் பௌத்த மக்களது இன ஐக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும், பாணந்துறையில் பன்னெடுங்காலமாக இன ஜக்கியத்தை  கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன் என்றார்.1 comment:

Aboobucker Abahulfan said...

TERRORIST BBS!
YOUR INTOLERANT MINDS PSYCHOLOGICALLY TORMENT YOU AND YOUR ALL PARTNERS IN THIS COUNTRY BECAUSE OF WELL-BEINGS OF MUSLIMS.

YOUR UNNECESSARY NARROW MINDED THOUGHTS ON MUSLIMS' POPULATION, THEIR PROPERTIES, EDUCATION, GOOD BEHAVIOURS MAKE YOU JEALOUSY.

WE AGREE WITH YOU SRI LANKA IS A BUDDHIST COUNTRY. BUT IT BELONGS TO ALL OF US. IF WE WANT TO MAKE OUR COUNTRY DEVELOPED IN ASIA, HOW COULD YOU HELP?

YOU, LIVING UNDER THE OTHER'S ECONOMY WITHOUT CONTRIBUTING EVEN A RUPEE BY YOUR OWN EARNINGS...!!!,
HOW CAN YOU DEVELOP OUR COUNTRY?
HOW DO YOU KNOW OUR COUNTRY'S ECONOMY?
WHAT DO KNOW HOW SL MUSLIMS CONTRIBUTE FOR OUR NATION?
DO YOU WANT TO SEE OUR NATION LIKE SOMALIA?

DON'T THINK...
BY DESTROYING PROPERTIES OF MUSLIMS YOU ARE WEAKENING MUSLIMS. NEVER ...
YOU ARE DESTROYING OUR NATION'S PROPERTIES!
YOU ARE WEAKENING OUR COUNTRY'S STRENGTH!
INSHA ALLAH YOU AND YOUR PARTNERS WILL SEE A CHANGE IN THIS COUNTRY FOR YOUR NARROW-MINDED PLOTS!
ALLAH, THE MOST OMNISCIENT... IS EVER THE GREATEST RULER OF ALL!
HE IS ENOUGH TO US!

Post Top Ad