மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இவ்வருடம் அறுவடைக்கு தயாரான பேரீத்தம் பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வு-படங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 25, 2014

மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இவ்வருடம் அறுவடைக்கு தயாரான பேரீத்தம் பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வு-படங்கள்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்ää பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீத்த மரங்கள் பூத்தும் காய்த்தும்ää பழமாகியதையடுத்து அதனை அறுவடை செய்யும் நிகழ்வு 24-06-2014 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது இவ்வருடம் அறுவடைக்கு தயாரான பேரீத்தம்பழங்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ääஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ää சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் ஆகியோர் அறுவடை செய்தனர்.

இந்த பேரித்தம் பழங்ளை அறுவடை செய்யும் நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின்;ää பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அந்தரங்கச்;  செயலாளர் எம்.ஐ.நாஸர் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்ய முடிந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
No comments:

Post Top Ad