முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவத்தை கண்டித்து த.தே.கூட்டமைப்பு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவத்தை கண்டித்து த.தே.கூட்டமைப்பு யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவத்தை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளது.
இலங்கையில் அளுத்கமவில் முஸ்லிம் சகோதர இனத்தினருக்கு எதிராக நடாத்தப்பட்ட வன்முறைகளில் மூன்று பேர் கொல்லப்பட்டும் அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், ஏராளம் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் மோசமான மானுடத்துக்கு எதிரான கொடுரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் சட்டம, நீதி என்பன கானல் நீராகி மக்கள் வாழும் அச்ச சூழலுக்குள் முழுநாடும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய மக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2014.06.20 அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்த உள்ளதாக பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மானுட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க கட்சிகள் ஒன்று திரளவேண்டுமென சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad