முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை நடாத்தியுள்ளனர்.

ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.
2 comments:

SATO MANSOOR said...

MUSLIM SAMOOKAM ORU SARVATHESA SAMOOKAM...

Fowzer said...

The media should be very careful of using some words. Muslims are ever Muslims. Muslims are not Islamiya Tamilarhal as used in the article. Please be vigilant when using such words. Try to ever use Muslims, please.

Post Top Ad