பொதுபல சேனாவை தடைசெய்து ஞானசாரரை கைது செய்யக் கோரி பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

பொதுபல சேனாவை தடைசெய்து ஞானசாரரை கைது செய்யக் கோரி பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள் (படங்கள் இணைப்பு)


பொதுபல சேனா அமைப்பை இலங்கையில் தடைசெய்து, இனவாதத்தை தூண்டி வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி பிரான்ஸில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்று பிரான்ஸில் குடியேறியுள்ள முஸ்லிம் சமூகம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பாரிஸில் நடைபெற்றது.
முஸ்லிம்களுடன் தமிழர்களும், சிங்களவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் ஈபிள் டவருக்கு அருகில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அளுத்கமவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
No comments:

Post Top Ad