பேருவளை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

பேருவளை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருவளை பிரதேசத்தில் ஏற்பட்ட கலவர நிலைமைகளை அடுத்து அகதி முகாம்களில் தங்கியிருந்த முஸ்லிம்களை வீடுகளுக்கு திரும்புமாறு கோரி அரசாங்கம் இன்று காலை ஊரடங்குச் சட்டத்தை நீக்கிய நிலையில், முஸ்லிம்கள் அகதி முகாமுக்கு எதிரில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தாம் திரும்பி சென்று வசிப்பதற்கு இடமில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
பிரதேசத்தில் எந்த நேரத்திலும் வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால் பிரதேத்திற்கு வலுவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் அட்டகாசத்தை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு இரவு நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பெருமளவில் அழிந்துள்ளன.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.No comments:

Post Top Ad