ஆலிம்களை விமர்சனம் செய்யும் சமுதாயம் உருவாகிவிட்டது. இதுவே எமது சமூகம் பின்னடைவுக்கு முக்கிய காரணம். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

ஆலிம்களை விமர்சனம் செய்யும் சமுதாயம் உருவாகிவிட்டது. இதுவே எமது சமூகம் பின்னடைவுக்கு முக்கிய காரணம்.


("அண்மைக்காலமாக வெளியிடப்படும் சில விமர்சனங்களை பார்த்து மனமுடைந்து இதனை எழுதுகின்றேன்.")

அன்பு முகநூல் சகோதரர்களே…! வாலிபர்களே…! சிந்தியுங்கள்…!!


கண்ணியமிக்க உலமாக்கள் மீது வீண் பலிஇ அவதூறுகளை சுமத்தி வசைபாடி ஏதோ சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாலிபர்களே…! சிந்தியுங்கள்…!!
வாழ்கையில் சுமார் பாதிக்கு மேல் இஸ்லாமிய சட்ட அறிவை தேடுவதிலும் கற்பதிலும் செலவுசெய்த மார்க்க மேதைகள்இ இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கவேண்டிய கண்ணியம் மரியாதை என்பவற்றை ஒதுக்கிவிட்டு ஒப்பீட்டு ரீதியில் கால் சுண்டு அறிவு கூட இல்லாத சிலர் முகநூல்களிளும் இணையங்களிளும் தாம் பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக கண்ணியமிக்க உலமாக்கள் மீது வீண்பழிஇ அவதூறு போன்றவற்றை சுமத்தி தகாத வார்த்தைகளை பிரயோகித்து வசைபாடி கட்டுரைகளும் பின்னூட்டங்களும் எழுதி முகநூல்களிளும் இணையங்களிளும் பதிவேற்றி ஏதோ சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாலிபர்களே நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவ்வாறு முகநூல்களில் அவதூறை வாரிவீசும் அப்பாவி வாலிபர்கள் ஒருகணம் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும்.

நாட்டின் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்களை தூரநோக்கோடு நோக்கி புத்திஜீவிகள்இ மார்க்க மேதைகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் போன்ற பல குழுக்கள்இ இணைந்து கலந்து ஆலோசித்து மசூரா எனும் அடிப்படையில் ஏகோபித்து எடுக்கப்படும் ஒவ்வொரு நகர்வுகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்களை அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது.

இக்காலகட்டத்தில் சமுதாயத்தின் நலன் கருதி ஜம்மியாவினால் பேனப்பட்டுவரும் மெத்தனப்போக்கை ஒரு சிலர் விமர்சித்து பழிக்குப்பழிஇ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என உணர்ச்சியூட்டி வசப்பு வார்த்தைகளை எல்லாம் பிரயோகித்து அறிக்கை வெளியிடுகின்றனர். ஹுதைபிய்யா சர்ச்சையில் போர் செய்ய தேவை இருந்தும் நபி(ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.  மக்காவில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் போர் செய்ய தேவை இருந்தும் அல்லாஹ் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இஸ்லாமானது அஹிம்சையினாலும்    பொறுமையினாலும் வளர்ந்த மார்க்கம். இதனடிப்படையின் தலைமையினால் மசூரா அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஒருவரை நோக்கி அவதூறுகளை வாரிவீசி வசைபாடி பல்வேறு வகையான விமர்சனங்கள் செய்வது மட்டுமல்லாமல் இணையங்களில் ஒருசிலரின்   புகைப்படங்களை பயன்படுத்தி எதிராக கட்டுரைகளும் ஒழுங்கற்ற முறையில் பின்னூட்டங்களும் எழுதுவதும் எந்த வ கையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையுமல்ல.

தான்தோன்றித்தனமாக குறிப்பிட்ட தனி நபரை  தூற்றி வசைபாடிய ஒவ்வொருவரும் தன் கூலியை பெற்றே ஆகவேண்டும். மேலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் மனதை அநியாயமாகப் புண்படுத்தி தங்களுடைய ஆஹிரத்தை (மரணத்திற்கு பின்புள்ள வாழ்க்கை) தாங்களே வீணாக்கி கொள்ள வேண்டாம். இது குறித்து ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவ்வாறு உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவோர்களுக்கு எதிராக தண்டிக்க இறைவன் போதுமானவன் என்பதை ஒருகணம் சிந்தித்து தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் கையேந்தி அழுது புலம்பி மன்றாடி பாவ மன்னிப்பு பெறவேண்டும்.


- முகம்மத் அஜ்வத் -

No comments:

Post Top Ad