டீன் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 13, 2014

டீன் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழா (படங்கள் இணைப்பு)மூதூர் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அனுசரனையில் மூதூர் டீன் ஸ்டூடியோ நடாத்தும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழா நேற்று 2014-06-12 வியாழக்கிழமை மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மூதூரின் முதல்வர் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஜனாப் ஏ.எம்.ஹரீஸ் விஷேட விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயளாலர் ஜனாப் ஜெய்னுதீன் அமீர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர்பீட உறுப்பினரும்,திருகோணமலை மாவட்ட இளைஞர் கழக அமைப்பாளருமாகிய ஜனாப் ஜே.எம்.லாகீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு இத்தொடரில் பங்கேற்கும் சகல அணி வீரர்களும் கலந்துகொண்ட அதே வேளை ஊர்மக்களும் கலந்துகொண்டனர்.

அத்தோடு இந்த மாபெரும் கிரிக்கட் தொடரினை ஆரம்பிக்கும் முகமாக சகல அணிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட அணி வீரர்களைக்கொண்ட x1 மற்றும் x2 என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு சினேகபூர்வ கிரிக்கட் போட்டி ஒன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad