கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

பொது பலசேனாவின் பேர­ணியை தொடர்ந்து அளுத்­கம, பேரு­வளை பகு­தி­களில் ஏற்­பட்ட வன்­முறை கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ள­வர்­களின் எண்­ணிக்கை மூன்­றாக உயர்ந்­துள்­ளது. அத்­துடன் இதன் தொட­ராக நேற்று முன்தினம் இரவு மத்­து­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட வெலிப்­பன்னை பகு­தியில் அடை­யாளம் தெரி­யாத குழு­வொன்று முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான பண்ணை ஒன்­றினை தாக்கி சேதப்­ப­டுத்­திய சம்­ப­வத்தில் அதன் காவ­லாளி ஒருவர் கொல்­லப்­பட்­டுள்ளார். இதனையடுத்து அளுத்­கம மற்றும் பேரு­வளை பொலிஸ் பிரி­வு­க­ளிலும் ஏற்­பட்ட வன்­முறை, அதன் தொடர்ச்­சி­யாக அரு­கி­லுள்ள பகுதிகளில் இடம்பெற்ற நாச­கார செயல்­களில் இதுவரை மொத்­த­மாக நால்வர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
 
இந்த நிலையில் நேற்றுக் கலை 8 மணி முதல் அளுத்­கம, பேரு­வளை பொலிஸ் பிரி­வு­களில் பொலிஸ் ஊர­டங்­கா­னது நான்கு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு தளர்த்­தப்­பட்­ட­தா­கவும் பின்னர் மீண்டும் நண்­பகல் 12 மணி முதல் அவ்­வூ­ர­டங்­கா­னது மறு அறி­வித்தல் வரை அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன 'கேச­ரி­'யிடம் தெரி­வித்தார்.
 
ஊர­டங்கு அமு­லி­லி­ருந்தவேளை சந்­தே­கத்­துக்­கி­ட­மான வகையில் நட­மா­டிய 41 பேர் இது வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.
 
அளுத்­கம மற்றும் பேரு­வளை பொலிஸ் பிரி­வு­களில் ஏற்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்கள் அதனை அண்­டிய பல பிர­தே­சங்­க­ளுக்கும் பர­வி­யுள்­ளது. இதன்­படி நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு முதல் மத்­து­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வெலிப்­பன்னை பகு­தியில் முஸ்­லிம்கள் மீதும் அவர்­க­ளது சொத்­துக்கள் மீதும் அடை­யாளம் தெரி­யாத குழு­வி­னரால் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதனை விட நேற்­றைய தினம் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் அம்­ப­லாங்­கொடை பகு­தி­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கடை ஒன்றின் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.
 
இந் நிலையில் வன்­மு­றை­களில் காய­ம­டைந்­த­வர்கள் தொடர்ந்தும் நாகொடை, பேரு­வளை, அளுத்­கம ஆகிய வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் மேலும் நால்வர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.
 
வெலிப்­பன்னை, பலப்­பிட்­டி­ய­விலும் பதற்றம்
 
மத்­து­கம , வெலிப்­பன்ன பகு­தியில் நேற்று முன் தினம் திங்­கட்­கி­ழமை நள்­ளி­ரவு முதல் நேற்றுக் காலை வரை பதற்ற நிலை ஒன்று உரு­வா­னது. இதன் போது சுமார் 150 பேரைக் கொண்ட அடை­யாளம் தெரி­யாத குழு­வினர் வெலிப்­பன்­னையில் உள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான பண்ணை ஒன்றின் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்ளனர்.
இதன் போது பண்­ணையின் காவ­லா­ளி­யாக செயற்­பட்ட 58 வய­து­டைய தமிழர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மேலும் ஒருவர் காய­ம­டைந்து வத்­தேவ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
 
பொலி­ஸாரின் தக­வல்­களின் பிர­காரம் திங்­க­ளன்று நள்­ளி­ரவில் மட்டும் வெலிப்­பன்னை நகரில் உள்ள 10 கடைகள் அடித்­து­டைக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டுள்­ளன.
இத­னை­விட புதி­தாக இஸ்­லாத்தை ஏற்­ற­தாக கூறப்­படும் குடும்­பத்­தினர் தங்­கி­யி­ருந்­த­தாக தெரிவிக்கப்படும் நான்கு வீடு­களும் இதன் போது உடைத்து அதில் ஒன்­றுக்கு தீவைக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து கிடைக்கும் தக­வல்கள் குறிப்­பிட்­டன.
 
எவ்­வா­றா­யினும் பதற்ற சூழ­லையைத் தொடர்ந்து வெலிப்­பன்னை பொலிஸ் பிரி­வுக்கு விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் வர­ழைக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து அங்கு நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
 
இத­னை­விட காலி மாவட்­டதின் பலப்­பிட்­டிய பகு­தி­யிலும் நேற்று முன் தினம் இரவு பதற்ற சூழல் நில­வி­யது. முஸ்­லிம்­களின் வீடுகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளதால் இந்த பதற்றம் ஏற்­பட்­ட­தாக பிர­தேச வாசி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.
 
எனினும் அப்­பி­ர­தேச சிங்­கள மக்கள் முஸ்­லிம்­களை பாது­காத்தை தொடர்ந்து நிலைமை மோச­ம­டை­ய­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
 
தொடரும் மோதல் நிலைமை
 
இதே­வேளை நேற்று முன்­தினம் திங்கட் கிழமை இரவும் அளுத்­கம, பேரு­வளை மற்றும் தர்கா நகர் பகு­தி­களில் வன்­மு­றைகள் பதி­வா­கின. தர்கா நகர் மற்றும் பேரு­வளைப் பகு­தி­களில் குறித்த இரவு முழுதும் அச்ச சூழல் நில­வி­ய­துடன் துப்­பாக்கிச் சூட்டு சத்­தத்­தையும் கேட்க முடிந்­தது.
 
எவ்­வா­றா­யினும் நேற்று நள்­ளி­ர­வாகும் போது தர்கா நகர் முழு­மை­யான இரா­ணுவ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்ட நிலையில் அங்கு வன்­முறை சம்­ப­வங்கள் குறைந்­துள்­ள­தாக அறிய முடிந்­தது. எனினும் அளுத்­கம மற்றும் பேரு­வளை பகு­தி­களின் பல பிர­தே­சங்­களில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடிக்­கி­றது.
 
உயி­ரி­ழப்­புக்கள், காயங்கள்
 
இத­னி­டையே வன்­முறை கார­ண­மாக தர்கா நகர், வெலிப்­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதான துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்த இரு­வரின் ஜனா­ஸாக்கள் நேற்று முன்­தினம் மாலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட நிலையில் அத்­துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் படு­கா­ய­ம­டைந்த மற்­றொரு நபர் நேற்று வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்தார். 37,35 வய­தான இரு­வரின் ஜனா­ஸாக்கள் நேற்று முன்தினம் அடக்கம் செய்­யப்­பட்ட நிலை­யி­லேயே மேலும் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.
 
இந் நிலையில் சுமார் 50 இற்கும் மேற்­பட்டோர் வைத்­தி­ய­சா­லை­களில் தொடர்ந்தும் தங்­கி­யி­ருந்து சிகிச்சைப் பெறு­வ­தாக குறிப்­பிட்ட பொலிஸார், காய­ம­டைந்­த­வர்­களின் எண்­ணிக்கை இத­னை­விட அதி­க­மாக இருக்­கலாம் எனவும் கணக்­கி­டு­வதில் சிக்கல் நில­வு­வ­தா­கவும் குறிப்­பிட்­டனர்.
 
இடம்­பெ­யர்வும் உத­வி­களும்
 
இதே­வேளை வன்­முறை கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொடர்ந்தும் பேரு­வளை அல் ஹுமை­ஸரா வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
நேற்று முன்தினம் திங்­கட்­கி­ழமை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் எடுத்துச் சென்ற லொறி­யொன்று வன்­மு­றை­யா­ளர்­களின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த நிலையில் தர்கா நகர், பேரு­வளைப் பகு­தியில் இடம்­பெ­யர்ந்த சுமார் 2600 பேருக்கு பெரும் உணவு தட்­டுப்­பாடு நில­வி­யது. திங்­க­ளன்று இரவு பலர் உண­வின்றி இருந்­துள்­ள­துடன் பள்­ளி­வா­சல்கள் மற்றும் பாட­சா­லை­களில் தங்­கி­யுள்­ள­வர்­களில் மூன்று பேருக்கு ஒரு உணவுப் பொதி வீதமும் பகிர்ந்­து­கொள்ள வேண்­டிய அள­வுக்கு நிலைமை மோச­மா­னது.
 
ஊர­டங்கு தளர்வு
 
இந் நிலையில் நேற்று காலை ஊர­டங்கு தளர்த்­தப்­பட்டு நான்கு மணி நேர அவ­காசம் வழங்­கப்­பட்­டதை அடுத்து வெளி இடங்­க­ளி­லி­ருந்து நிவா­ரண உத­விகள் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அளிக்கப்பட்டதாக தெரியவரு கின்றது. மீண்டும் நேற்று 12 மணி முதல் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இராணுவத்தினர் பாதுகாப்பு
 
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பதற்றத்தை அடுத்து பொலிஸாரின் வேண்டு கோளுக்கிணங்க இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
அளுத்கமவின் ஐந்து பிரதேசங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக் கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இதன்படி, அளுத்கம, வெலிப்பன்னை, தர்கா நகர், பேருவளை மற்றும் மக்கோன ஆகிய பிரதேசங்களிலேயே இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியது.

(vi)

No comments:

Post Top Ad