ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இழந்து விடும் ! ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இழந்து விடும் ! ஹக்கீம்

கலகொட அத்தே ஞானசார தேருக்கு எதிராக உடனடியான நடவடிக்கையை எடுக்காதுபோனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமரிக்க தூதுவர் மிச்செய்ல் சிசன் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தபோதே ஹக்கீம் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.எனினும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை
இந்தநிலையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அமரிக்காவும் ஐக்கிய நாடுகளின் செயலாளரும் கண்டனம் வெளியிட்டடமைக்கு ஹக்கீம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்ததில் பிழை எதுவும் இல்லை என்றும் ஹக்கீம் கூறினார்.

No comments:

Post Top Ad