கிண்ணியா அரசியல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 04, 2014

கிண்ணியா அரசியல்அரசியல் என்னும் போர்வாள்
அறியாமையை சாகடித்து,
அறங்களை அரியாசனத்தில்
- அமர்த்த வேண்டும்.

அரசியல் குளிர் தரும்
சாதனமாக இல்லாமல்,
தாகம் தணிக்கும் தண்­ணீராக
- இருக்க வேண்டும்.


அரசியல் சாக்கடை என்று
கூவி கொண்டு இருக்காமல்
அதில் உள்ளே சென்று சுத்தம்
- செய்ய வேண்டும்.

அரசியல் சண்டை போடும்
சாதகமாக இல்லாமல்
சமத்துவம் பாடும் வேதமாக
- இருக்க வேண்டும்.

அரசியல்வாதியாக விரும்பினேன்
அளவுக்கு அதிகமாக
பொய் சொல்ல வேண்டி
இருப்பதால்
அது முடியவில்லை.

அரசியலுடன் கைகோர்ப்போம்!
ஆனந்தத்தின் இருப்பிடமாக
எமது தேசத்தை மாற்றுவோம்!

உலகத் தேவைகளுக்கு வாழாமல்
உள்ளத் தேவைகளுக்கு வாழ்வோம்!
சேவை செய்வோம்!
தேசம் காப்போம்!
நல்லதோர் கிண்ணியா அமைப்போம்.

நாம் கிண்ணியர்
நமது கிண்ணியா!!!

Rilmath Harees
Public relationship secretary
We are Kinniyan organisation
Kinniya

No comments:

Post Top Ad