கடும்போக்கு இனவாதிகளின் ஈனச் செயல்களினால் இழப்புக்களைச் சந்தித்துள்ள அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேச மக்களுக்காக கிழக்கு மாகாண சபையில் ஏகமனதான கண்டனத் தீர்மானமெடுக்க கிடைத்த சந்தர்ப்பம் வீணடிக்கப்பட்டமை வேதனை அளிக்கின்றது. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

கடும்போக்கு இனவாதிகளின் ஈனச் செயல்களினால் இழப்புக்களைச் சந்தித்துள்ள அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேச மக்களுக்காக கிழக்கு மாகாண சபையில் ஏகமனதான கண்டனத் தீர்மானமெடுக்க கிடைத்த சந்தர்ப்பம் வீணடிக்கப்பட்டமை வேதனை அளிக்கின்றது.கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை


கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபைக் கூட்டம் 17ஆந் திகதி நடைபெறுவதற்கு முன்பு வழமை போல் காலை 08.30 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி தலைமையில்; கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்ää ஏ.எம்.ஜெமீல் ஆகியோர்களினால் அளுத்கம தாக்குதல் தொடர்பாக அவசர பிரேரணைகள் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


தேசிய காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களினால் அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அவசர பிரேரணையில் தனி நபர் பிரேரணை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும்ää முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பான அவசர பிரேரணையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பிலேயே இப்பிரேரணைகள் குறிப்பிடப்பட்டதாலும்ää இப்பிரேரணைகளை சபை நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ள முடியாதுள்ளதாகவும் சபை தவிசாளர் கூறினார். கட்சித் தலைவர்கள் எல்லோரும் எது எப்படி இருந்தாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் சம்பந்தமாக இன்று கிழக்கு மாகாண சபையில் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நமது நாட்டினுடைய இறைமையை பாதிக்கின்ற விதத்திலும்ää சமாதானத்தை குழப்புகின்ற விதத்திலான ரீதியிலான முன்னெடுப்புக்களை உடனடியாக எந்தக் குழுக்கள் என்றாலும் நிறுத்த வேண்டும் என்ற தனி நபர் பிரேரணை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எப்.எம்.ஷிப்லி அவர்களினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு இன்றைய நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருப்பதனால் இந்த பிரேரணையை மையமாக வைத்து அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல் சம்பந்தமாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும்ää எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் போதியளவு நேரம்; வழங்கப்படும் என தவிசாளர் தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு 2.15 மணித்தியாலயங்களும்ää எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 2.15 மணித்தியாலயங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சபைத் தவிசாளர் அவர்கள் சபைக்கு சென்று அமர்வை ஆரம்பிப்பதற்கு தன் ஆசனத்தில் அமர்ந்தார். அவ்வேளையில் கௌரவ உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் எழுந்து தன்னுடைய கண்டனப் பிரேரணையை சபையில் பிரஸ்தாபிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்று கூறினார். அதே நேரத்தில் கௌரவ தவிசாளர் அவர்கள் புதிதாக நியமனம் பெற்ற கௌரவ உறுப்பினர் கே.புஷ்பகுமார் அவர்களுக்கு 5 நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கப்போவதாக கூறää கௌரவ உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்கள் கௌரவ கே.புஷ்பகுமார் அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறினார். சபை தவிசாளர் சபை அமர்வை ஒத்தி வைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பை விடுத்தார். கட்சித் தலைவர் கூட்டம் கூடிய போது முஸ்லிம் மக்கள் வாழும் அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றதை போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலும்ää சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறலாம். இவ்வாறான நிலையில் நாங்கள் இவ்விடயத்தை விவாதிப்பதற்கு கிழக்கு மாகாண சபையில் ஒரு நிலையான நிலைப்பாட்டை பேண வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன்.

இவ்விடயத்தையிட்டு எதிர்க்கட்சித் தலைவர்ää சி.தண்டாயுதபானிää முன்னாள் முதலமைச்சரும்ää மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்களும்ää பிரதித் தலைவர் எம்.எஸ்.சுபைர் அவர்களும்ää கிழக்கு மாகாண சபையில் இது சம்பந்தமாக பேசுவதற்கு ஒரு நிலையான நிலைப்பாட்டை பேண வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் கௌரவ தவிசாளர் அவர்கள் சட்டம் இடமளிக்காத காரணத்தினால் இச்சநதர்ப்பத்தில் தன்னால் 1987ஆம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்திற்கு இணங்க கிழக்கு மாகாண சபை செயன்முறைக் கோவைக்கமைய என்னால் சபையை கொண்டு நடாத்தப்பட முடியும் என தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில்ää கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்கள் இன்று காலையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல்; சம்பந்தமான அவசர பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து கொள்வதற்கு தவிசாளர் அனுமதி வழங்க மறுத்துள்ளார் என தெரிவித்து பாதிக்கப்பட்ட அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களுக்கு மக்களை பார்வையிட சென்ற போது நானும் சிலரால் தாக்கப்பட்டேன். இது குறித்து இன்னுமொரு அவசர பிரேரணையை சமர்ப்பிக்கின்றேன் எனக்கூறிää இவ் அவசர பிரேரணையை தவிசாளரிடம் கையளித்தார். இந்த அவசர பிரேரணையை மீது பேச வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கான அனுமதி தவிசாளரினால் மறுக்கப்பட்டது.

இன்று இரண்டாவது தடவையாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டும் இறுதியில் ஒரு இறுதி தீர்மானம் எடுக்க முடியாத நிலமை உருவாகி வருகின்றது. எனவேää முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் அவர்கள் அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர பிரேரணையை சபையில் சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இப்பிரேரணை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் வழிமொழிய தவிசாளர் அனுமதி வழங்க வேண்டும்.

இது தொடர்பாக தவிசாளர் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர வேண்டும் இல்லையென்றால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி உறுப்பினர் ஏ.எம்.எப்.ஷிப்லி அவர்களின் பிரேரணையின் மீது அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல்; தொடர்பான கண்டனங்களை தெரிவிப்பதற்கு 4.30 மணித்தியாலயம் பேசுவதற்கு தீர்மானம் எடுக்க வேண்டுமென கூறினேன். இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்த வேளையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தவிசாளரின் அறைக்குள் கட்சித் தலைவர்களின் கூட்ட சம்பிரதாயத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 5 பேரும் திடீர் என நுழைந்து மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.

மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்க இருப்பதாக தவிசாளர் அறிவித்தார். அவ்வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் சபை நடவடிக்கைக்குரிய செங்கோலை கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியே எடுத்துச் சென்றனர். பின்பு தவிசாளர் கூட்டத்தை ஆரம்பித்து புதிதாக நியமிக்கப்பட்ட கௌரவ உறுப்பினர் கே; புஷ்பகுமார் அவர்களை அவர்களுடைய கண்ணிப் பேச்சை நிகழ்த்துமாறு கூறினார். இச்சந்தர்ப்பத்திலும் கௌரவ உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்கள் எழுந்து இதனை அனுமதிக்க முடியாது என்றார். தவிசாளர் ஜூலை மாதம் 16ஆந் திகதி வரை சபையை ஒத்தி வைத்தார்.

இவ்வாறு இந்த சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதனால் அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல்; தொடர்பான உண்மை நிலமையை கிழக்கு மாகாண சபையில் தெரிவிக்க முடியாத நிலமையும்ää கிழக்கு மாகாண சபை ஊடாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழியுறுத்த முடியாது போனது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல்; இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவின் தாக்கமானது நமது நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்துள்ளது. இது பற்றி பேசுவதோ அதற்கான நடவடிக்கை எடுப்பதோ ஒரு தனி நபருக்கு அல்லது ஒரு தனி கட்சிக்கோ சொந்தமானது அல்ல மாறாக சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய சமூகம் சார்ந்த விடயமாகும்.

அண்மையில் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது தமிழ் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து கறுப்புப்பட்டி அணிந்து சபைக்குள் வந்து தங்களின் உணர்வுகளை ஒற்றுமையுடன் காட்டினர். முஸ்லிம் சமூகம் சார்ந்த அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆளும் கட்சியில் அங்கத்துவம் பெற்று இருக்கின்ற முதலமைச்சர்ää தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள்ää அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாகவே முடிவெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர் மாத்திரம் திடீரென சபைக்குள் கறுப்புப்பட்டி அணிந்து வந்ததன் மூலம் கட்சி நலனுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்ததை வெளிப்படையாக காட்டுகின்றது.

ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினைகள் இடம்பெறும் போதும்ää அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதும் சமூக நலனுக்கு மேலாக கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இது அமைகிறது. இவர்களின் கட்சி நலன் சார்ந்த நடவடிக்கையின் காரணமாக எல்லோருமே ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபை ஊடாக இனவாதிகளின் ஈனச்செயல்களுக்கான கண்டனத்தையும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான அழுத்தத்தையும் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்துள்ளது.

முன்னாள்  முதலமைச்சர் எஸ். சந்திகாந்தன் அவர்கள்  கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்ää பல கட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்கள்ää உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது வட கிழக்கிலும்ääவட கிழக்கிற்கு வெளியிலே வாழ்கின்ற சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவத்தின் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனை உணர்ந்து சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு வாராத வகையில் இப் பிரதேச சபை திருத்த சட்ட மூலம் திருத்தியமைக்கப்பட்டால் மாத்திரம் தான் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் வழங்குவோம் என்று திருப்பி அனுப்பியதுடன் கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற சிறுபாண்மை மக்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையில் தீடீரென கிழக்கு மாகாண சபையின் அனுமதியை கோரி அனுப்பி வைக்கப்பட்ட நாடு நகர அபிவிருத்தி திட்ட சட்ட மூலத்தினையும் திருப்பியனுப்பிய வரலாறு கிழக்கு மாகாண சபைக்கு இருக்கிறது. இந்த நிலையில் அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பபட்ட தாக்குதல் தொடர்பான இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு முஸ்லிம் முதலமைச்சர் பதவியிலிருக்கும் கிழக்கு மாகாண சபையிலிருந்து அளுத்கமääதர்க்கநகர் மற்றும் வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆளும் கட்சிகள்ää எதிர்க் கட்சிகள் சேர்ந்து எல்லோரும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண மக்களின் ஏகமனதான கவலையையும் கண்டணத்தையும் தெரிவிக்க முடியாமல்  போனது கவலைக்குரிய விடயமாகும்.


No comments:

Post Top Ad